வெலிங்டன் - ஜான் கே ராஜினாமாவை தொடர்ந்து நியூசிலாந்து புதிய பிரதமராக பில் இங்கிலீஷ் பதவி ஏற்றார். ஜான் கே ராஜினாமா
நியூசிலாந்து பிரதமராக தேசிய கட்சி தலைவர் ஜான் கே கடந்த 8 ஆண்டுகளாக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த வாரம் அவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். இது நியூசிலாந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது.
பில் இங்கிலீஷ் தேர்வு
இந்த நிலையில் தலைநகர் வெலிங்டனில் உள்ள அரசு இல்லத்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேசிய கட்சியின் கூட்டம் நடந்தது. அதில் நிதி அமைச்சராக இருந்த பில் இங்கிலீஷ் (54) புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை தொடர்ந்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக அவர் பதவி ஏற்றார். துணை பிரதமராக மந்திரி பவுலா பென்னெட் அறிவிக்கப்பட்டார். அவர்களுக்கு பதவி விலகிய பிரதமர் ஜான் கே மற்றும் தேசிய கட்சி தலைவர் பீட்டர் குட் பெல்லேர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
English Summary : New Zealand Prime Minister Bill English swearing.New Zealand's new prime minister, following the resignation of John Q. Bill English took over. John Gay's resignation
Prime Minister of New Zealand National Party leader John Cole served as the last 8 years. In this position he abruptly resigned last week. It caused shock among the people of New Zealand. Then the question arose of who the next prime minister.