கனோ: நைஜீரியாவின் மக்கள் கூட்டம் மிகுந்த மார்க்கெட்டில், இரண்டு பெண்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 45 பேர் பலியானார்கள். 33 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
உயர்வு:
நைஜீரியாவின் மடகலி நகரில் உணவு பொருட்கள் மற்றும் துணி விற்பனை செய்யும் சந்தைக்கு, நுகர்வோர் போல் வந்த இரண்டு பெண்கள் தங்களது உடலில் மறைத்து கட்டிவைத்திருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் 30 பேர் பலியாகியிருந்ததாக ராணுவம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்த சம்பவத்தில், 45 பேர் பலியாகியுள்ளதாகவும், 33 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. சம்பவ இடத்தில் மீட்டு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர், அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்திற்கு அந்நாட்டு அதிபர் கண்டனம் தெரிவித்துள்ளார்
English Summary:
Kano, Nigeria's population is crowded market, killing 45 people in suicide bomb carried by two women. 33 people were injured. No one has claimed responsibility for the incident so far.