பாலசோர் : உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட் டுள்ள, 'நிர்பயா' ஏவுகணை, நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனை தோல்வியில் முடிந்தது.
டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள இந்த ஏவுகணை, 1,000 கி.மீ., தொலைவுக்கு பாய்ந்து, இலக்கை தாக்கக் கூடிய சக்தி உடையது. ஒடிசா மாநிலம், சந்திரபுரில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்பட்டு, நேற்று, மீண்டும் சோதித்து பார்க்கப்பட்டது. இச்சோதனை தோல்வியில் முடிந்தது.
2 நிமிடங்களில்..
இது குறித்து ராணுவம் மற்றும் ஆராய்ச்சி கழக அதிகாரிகள் கூறியதாவது : ஏவுகணை புறப்படும் நிலையில் இருந்தபோது அதன் ஆரம்பக்கட்ட இன்ஜின் சரியாக வேலை செய்தது. ஆனால் ஏவுதளத்தில் இருந்து அது விலகியபோது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு அடுத்த இரண்டு நிமிடங்களில் இலக்கை எட்டாமல் கீழே விழுந்துவிட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
4ல் 3 தோல்வி :
அதிநவீன தொழில்நுட்பத்துடன், ரேடார் மூலம் இயக்கக் கூடிய இந்த ஏவுகணையின் பாதையை, இடையில் மாற்றியமைக்கும் வசதி உள்ளது. இந்த ஏவுகணை, 2013 மார்ச், 12ம் தேதி முதல், முறையாக சோதிக்கப்பட்டது; ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் பாதியிலேயே அது நிறுத்தப்பட்டது. பின், 2014 அக்., 17ல், நடத்திய இரண்டாவது சோதனை, மிகவும் வெற்றிகரமாக அமைந்தது. அதை தொடர்ந்து, 2015 அக்., 16ல், மூன்றாவது முறையாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்த சோதனையும், பாதியிலேயே நிறுத்தப்பட்டது. தற்போது, நான்காவது முறையாக, நேற்று சோதித்து பார்க்கப்பட்டது. இதுவும் தோல்வியில் முடிந்தது.
பாக்., போட்டி :
பாகிஸ்தானும் நேற்று, தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய ஏவுகணையை, வடக்கு அரபிக்கடலில், போர்க் கப்பலில் இருந்து சோதனை செய்தது. இது வெற்றிகரமாக இலக்கை தாக்கியது.
English summary:
Balasore: domestic technology, which is locally produced tin, 'nirpaya' missile test seen yesterday. The experiment ended in failure.