பாரீஸ்:பிரான்ஸில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தற்போதைய அதிபர் பிரான்சுவா ஹொலாந்த் வெள்ளிக்கிழமை(நேற்று) அறிவித்தார்.
7 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும்:
கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இடது சாரி சோஷலிச கட்சி சார்பில் போட்டியிட்டு பிரான்சுவா ேஹாலண்ட் வெற்றி பெற்று அதிபரானார்.பொருளாதாரத் தேக்க நிலை, இஸ்லாமிய தேச பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளிட்டவை அவரது ஆட்சிக் காலத்தை குறிப்பிடத் தக்க அளவுக்கு பாதித்தன. அடுத்த ஆண்டு ஏப்ரலில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டால் அவருக்கு ஏழு சதவீத ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.
தற்போது பிரதமராகப் பொறுப்பு வகித்து வருகிற மானுவல் வால்ஸ் சோஷலிச கட்சி சார்பில் எதிராகத் தேர்தல் களத்தில் இறங்குவார் என்று கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தான் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று பிரான்சுவா ேஹாலண்ட் அறிவித்திருக்கிறார். இதையடுத்து, அதிபர் தேர்தலில் சோஷலிச கட்சி வேட்பாளராக மானுவல் வால்ஸ் அறிவிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. சோஷலிச கட்சியின் வேட்பாளர் தேர்வு ஜனவரி 22, 29 தேதிகளில் நடைபெறும்.பிரான்ஸ் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும். அதில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், இரண்டாம் கட்டத் தேர்தல் மே மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என தெரியவந்துள்ளது.
English summary:
Paris: France will not stand in the presidential election to be held next year, the current President Francois Hollande on Friday (yesterday) announced.