புதுடில்லி: 'கடந்த ஆண்டு கோடைக் காலத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில், வெயிலுக்கு அதிகமானோர் பலியானதற்கு, மனிதர்களின் இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளே காரணம்' என, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆய்வு :
கடந்த ஆண்டு கோடை காலத்தில், கடும் வெயிலுக்கு, இந்தியாவில், 2,500 பேரும், பாகிஸ்தானில், 2,000 பேரும் பலியாகினர். இதுகுறித்து, அமெரிக்காவின் பார்கலே பரிசோதனை மையம், டில்லி, ஐ.ஐ.டி., உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ஆய்வு செய்தன. உலகம் முழுவதும் கோடைக்காலத்தில் பதிவான வெப்ப நிலை, சீதோஷ்ண நிலை, காற்றின் தன்மை உள்ளிட்ட அம்சங்கள், இந்தியா, பாகிஸ்தானில் நிலவிய, அளவுகளுடன் ஒப்பிடப்பட்டு, இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மனிதர்களே காரணம் :
அதன்படி, சுற்றுச்சூழலுக்கு எதிரான மனிதர்களின் நடவடிக்கைகளால் தான், இந்தியா, பாகிஸ்தானில் கோடை காலத்தில் அனல் காற்று வீசுவதற்கும், வறண்ட வானிலை காணப்படுவதற்கும் முக்கிய காரணம் என, ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இயற்கைக்கு எதிரான நடவடிக்கைகளால், இந்த இரு நாடுகளிலும், பருவநிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என, ஆய்வறிக்கை கூறுகிறது.
English Summary:
'In the summer of last year, India and Pakistan, in the death of more than the sun, due to the actions of men against nature', as research has shown.