புதுடில்லி : 125 கோடிக்கும் அதிகமான மக்களில், வெறும் 1 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என 'நிதி ஆயோக்' அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்.
டில்லியில் தேசிய பேரிடர் மீட்புப்படை சார்பில் நடைபெற்ற 'ரொக்கம் இல்லாத பரிமாற்றம்' குறித்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ரொக்கம் இல்லா பரிமாற்றத்துக்கு நாடு மாற வேண்டிய நேரம் வந்துவிட்டது. உலகின் முன்னணி பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியாவை உயர்த்தும் நோக்கத்தில்தான், 'ஜன்தன் யோஜனா' திட்டத்தின் கீழ், 26 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு, 20 கோடிக்கும் மேற்பட்ட ரூபே கார்டுகள் வழங்கப்பட்டன. ஆயினும், 95 சதவீதம் பேர் இன்னும் ரொக்க வரவு-செலவுகளில்தான் ஈடுபட்டு வருகின்றனர். இது, இந்தியாவுக்கு ஏற்புடையதல்ல என்றார்.
English summary:
NEW DELHI: More than 125 million people, only 1 per cent of income subject to tax as 'financial ayok' Amitabh Kant said the organization's chief executive officer.