புதுடெல்லி - எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் பாராளுமன்ற நடவடிக்கை 13-வது நாளாக ஸ்தம்பித்தது. கடந்த இரு வாரமாக, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடர் துவங்கிய தருணத்தில்தான் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனால் நாட்டில் உள்ள மக்கள் இந்த பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளில் நாள் முழுவதும் காத்துகிடக்க வேண்டியிருந்தது.
மக்கள் அவதி : மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால் சாதாரண, நடுத்தர மக்கள் அன்றாட வாழ்வாதாரத்திற்கு பணம் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே அரசு தனது முடிவை ரத்து செய்ய வேண்டும். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை குறிப்பிட்ட காலத்திற்கு அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் அரசு தனது முடிவில் மாற்றமில்லை என திட்டவட்டமாக அறிவித்தபோதும், இந்த பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அவைக்கு வரவேண்டும் என ராஜ்ய சபாவில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
திரிணாமுல் எதிர்ப்பு
இந்தநிலையில், எதிர்க்கட்சிகளின் தீவிர எதிர்ப்பால் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஸ்தம்பித்தன. மேற்கு வங்கத்தில் சுங்கச்சாவடிகளில் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பது குறித்து மாநில அரசுக்கு தெரிவிக்கவில்லை என அம்மாநில ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இரு அவைகளிலும் கேள்வி எழுப்பினர். இது வழக்கமான பயிற்சி நடவடிக்கை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அவை ஒத்திவைப்பு
இதற்கிடையே, பயிர் காப்பீடு கட்டணத் செலுத்த முடியாமல் விவசாயிகள் சிரமப்படுவது குறித்து அ.தி.மு.க எம்.பி. நவநீத கிருஷ்ணன் கூறினார். லோக்சபாவில் தொடர்ந்து அமளி ஏற்பட்டதால் அவை திங்கட் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்ய சபாவில், பாராளுமன்றத்திற்கு வெளியே பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்களுக்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என எதிர் கட்சியினர் வலியுறுத்தினர். எதிர் கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து கூச்சல் போட்டதால் அவை நடவடிக்கைகள் தடை பட்டது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
English Summary : Opposition members of Parliament action by the 13th day of tumult, as the series came to a halt.Opposition members of Parliament action by the 13th day of tumult, as the series came to a halt. For the past two weeks, is ongoing winter session of Parliament. The session started ...