புதுடில்லி: இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் கவுரவ நிரந்தர தலைவராக கல்மாடி, சவுதாலா நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
எதிர்ப்பு:
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக (ஐ.ஓ.ஏ.,) 1996-2011 வரை கல்மாடி இருந்தார். கடந்த 2010ல் நடந்த டில்லி காமன்வெல்த் போட்டியில் ஊழல் புகார் ஏற்பட்டது. இதனால், அப்போதைய தலைவர் கல்மாடி மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டார். 10 மாத சிறைத்தண்டனை சென்று, பின் ஜாமின் பெற்றார்.
இந்நிலையில், ஐ.ஓ.ஏ., அமைப்பின் கவுரவ ஆயுட்கால தலைவராக கல்மாடி நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரில் சிக்கிய, மற்றொரு முன்னாள் ஐ.ஓ.ஏ., (2012-14) தலைவரான அபய்சிங் சவுதாலாவுக்கும் இதே பதவி தரப்பட்டுள்ளது. இது, எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்க முடியாது:
மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயல் கூறுகையில், ''ஐ.ஓ.ஏ.,வின் கவுரவ நிரந்தர தலைவராக கல்மாடி, சவுதாலா நியமிக்கப்பட்டது அதிர்ச்சியாக உள்ளது. இதை ஏற்க முடியாது. இது குறித்து ஐ.ஓ.ஏ., அதிகாரிகளிடம் பேசி, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இது குறித்து சவுதாலா கூறுகையில்,'' விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கோயலின் கருத்து வியப்பாக உள்ளது. துறையில் உள்ள பணிகளை முடிப்பதில் மட்டும் இவர் கவனம் செலுத்தினால் போதுமானது,'' என்றார்.
English Summary:
NEW DELHI: Indian Olympic Association's honorary permanent chairman Kalmadi, Chautala appointing the opposition said.