வாஷிங்டன் : ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா 2.5 கோடி டாலர் (150 கோடி ரூபாய்) பரிசு அறிவித்துள்ளது.
ஈராக்கில் உள்ள மோசுல் நகரில் இருந்து ஐஎஸ் பயங்கரவாதிகளை அழிக்க ஈராக் ராணுவப் படைகளுடன் அமெரிக்க விமானப்படையும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத் தலைவன் அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு அமெரிக்கா, ஒரு கோடி டாலர் பரிசு அறிவித்திருந்தது. இதற்கிடையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஈராக் படைகள் நடத்திய தாக்குதலில் அபூபக்கர் பாக்தாதி படுகாயமடைந்ததாகவும், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் ஈராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதை அதிகாரபூர்வ அறிவிப்பாக ஏற்றுக்கொள்ள அமெரிக்க அரசு மறுத்து விட்டது. அவன் இன்னும் உயிருடன் இருப்பதாக அமெரிக்க உளவுத்துறைக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், அபூபக்கர் பாக்தாதியின் தலைக்கு இரண்டரை கோடி டாலர் (இந்திய மதிப்புக்கு சுமார் 150 கோடி) பரிசாக அளிக்கப்படும் என அமெரிக்க அரசின் நீதிக்கான பரிசுதிட்ட இயக்குனரகம் தற்போது அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க சீல் படையினரால் பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அல் கொய்தா பயங்கரவாத இயக்கத் தலைவன் ஒசாமா பின்லேடனின் தலைக்குதான் இவ்வளவு பெரிய தொகையை பரிசாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary:
Washington: PCs. Terrorist leader Abu Bakr Baghdadi, the head of the movement of 2.5 million US dollars (Rs 150 crore) prize announced.