வாஷிங்டன்:ஹக்கானி பயங்கரவாத குழு மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு ரூ.2,600 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க பார்லிமென்ட் நிபந்தனை விதித்து உள்ளது.
ஆதரவு நிதி:
கூட்டணி நாடுகள் ஆதரவு நிதி மூலம் அமெரிக்க அரசு பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடும் நாடுகளுக்கு நிதி உதவி வழங்கி வருகிறது. இதற்காக சுமார் 5,900 கோடி ரூபாய் (900 மில்லியன் அமெரிக்க டாலர்)ஆண்டு தோறும் ஒதுக்கி வருகிறது. இந்த நிதியின் கீழ் 2017-ம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு ரூ.2,650 கோடி(400 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) வழங்கப்படவேண்டும்.ஆனால் அமெரிக்க பார்லிமென்ட்டின் இரு சபைகளிலும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
பார்லிமென்ட்டில் ஓட்டெடுப்பு:
இது தொடர்பாக கடந்த வாரம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையான கீழ்சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதன் மீது எம்.பி.க்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் ஹக்கானி வலைப்பின்னல் குழுவுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தாவிட்டால் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கக் கூடாது என 375 பேரும், வழங்கலாம் என 34 பேரும் வாக்களித்து இருந்தனர்.இந்த தீர்மானத்தின் மீது அமெரிக்க மேல்-சபையான செனட்டில் நேற்று முன்தினம் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் பாகிஸ்தானுக்கு எதிராக 92 பேரும், ஆதரவாக 7 பேரும் வாக்களித்தனர். இதனால் செனட் சபையிலும் பாகிஸ்தானுக்கு சாதகமான முடிவு அமையவில்லை.
4 நிபந்தனைகள்:
நிதி உதவி அளிப்பதில் பாகிஸ்தானுக்கு அமெரிக்க பார்லிமென்ட் விதித்துள்ள 4 முக்கிய நிபந்தனைகள்:
1. ஹக்கானி வலைப்பின்னல் குழுவின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது.
2. பாகிஸ்தான் எல்லையோர பகுதிகளில் ஹக்கானி குழுவிற்கு அடைக்கலம் தரக்கூடாது.
3. பாகிஸ்தானில் செயல்படும் இக்குழுவின் தலைவர்கள், ஆதரவாளர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
4. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஆப்கானிஸ்தானுடன் இணைந்து செயல்படவேண்டும். என்பதே அந்த 4 நிபந்தனைகள்.
English Summary:
Washington took action against the Haqqani terrorist group by the US and Pakistan would be provided financial assistance of Rs 2,600 crore, Parliament has imposed a condition.