புதுடெல்லி:
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர்ந்து ஒரு மாதமாக ,எதிர் கட்சிகள் எம்.பிக்கள் போராட்டம் மற்றும் தர்ணாவால் எந்த வித நடவடிக்கையும் இல்லாமல் முடங்கிவருகிறது. இது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறுகையில், பாராளுமன்றம் தர்ணா, போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல என்று எம்.பிக்களை கண்டித்துள்ளார்.
பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக பழைய ரூ 500, ரூ1000 நோட்டுகள் செல்லாது .கறுப்பு பணம், வரி ஏய்ப்பு, ஊழல் ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கவே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியன்று அறிவித்தார். அவரது அறிவிப்பு வெளியான ஒரு வாரத்தில் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் அப்பாவி நடுத்தர , ஏழை மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிகளின் முன்பாக நாடு முழுவதும் குவிந்து இருக்கிறார்கள். கடும் வெயிலில் பரிதவித்த 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் , எனவே பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற முடிவை அரசு திரும்பப்பெற வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் ஏறக்குறைய 20 நாட்களுக்கு மேல் பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரை நடத்த விடாமல் எதிர் கட்சிகள் முடக்கி வருகின்றன. ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றும்எதிர் கட்சியினர் கோரினார்கள். ராஜ்ய சபாவிற்கு பிரதமர் மோடி வந்த போதும் எதிர் கட்சியினர் விவாதம் நடத்த தயாராக இல்லை என ஆளும் கட்சித்தலைவர்கள் எதிர் கட்சியினரை கடுமையாக குற்றம் சாட்டினார்கள்.
இந்த நிலையில் 3வாரமாக பாராளுமன்றம் எந்த வித நடவடிக்கைகளும் முடங்கிப்போவதுகுறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று எம்.பிக்களை கடுமையாக எச்சரித்தார்.
இது பற்றி அவர் டெல்லியில் நேற்று பேசியதாவது,
பாராளுமன்றம் தர்ணா, இடையூறு ஏற்படுத்தும் இடமல்ல. பாராளுமன்றம் என்பது விவாதம் நடத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய இடமாகும்.
இடையூறு ஏற்படுத்துவது என்பதை சிறிதளவு கூட ஏற்க முடியாத விஷயமாகும். இந்த இடையூறில் பெரும் பான்மை வருவதில்லை.சிறுபான்மை மட்டுமே இடையூறினை ஏற்படுத்துகிறது. கோஷம் போடுவதாலும், அவை நடவடிக்கையை நிறுத்துவதாலும் அவையை ஒத்திவைப்பதை தவிர அவைத்தலைவருக்கு வேறு வழியில்லை. இந்த நடடிவடிக்கையை முற்றிலும் ஏற்க முடியாது. எத்தகைய கருத்து வேறுபாடு இருந்தாலும் பேசி தீர்க்க வேண்டும். இதில் எந்த கோர்ட்டும் தலையிட முடியாது.
இவ்வாறு ஜனாதிபதி டெல்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
English Summary:
For a month in winter get together Parliament, opposition parties and sit-in protest by MPs closing without any action. President Pranab Mukherjee in this regard, Parliament sit, that is not a place for struggle, denounced MPs.