தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தை முடக்கி வரும் எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தர்னா செய்வதற்கும், அமளியில் ஈடுபடுவதற்குமான இடம் அவை அல்ல என்று கண்டிப்புடன் கூறினார்.
ரூபாய் நோட்டு விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றன. இந்நிலையில், தில்லியில் நடைபெற்ற தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான கருத்தரங்கில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். அவர் தனது உரையில், நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் சாடினார். பிரணாப் பேசியதாவது:
நாடாளுமன்ற அமைப்பில் இடையூறு ஏற்படுத்துவது என்பது முற்றிலும் ஏற்க இயலாதது. மக்கள் தங்கள் பிரதிநிதிகளை பேசுவதற்குத்தான் அவைக்கு அனுப்புகின்றனரே தவிர, தர்னாவில் ஈடுபடுவதற்கும், பிரச்னை செய்வதற்கும் அல்ல.
இடையூறு ஏற்படுத்துவது என்பதற்கு நீங்கள் (எதிர்க்கட்சிகள்), பெரும்பான்மையைக் காயப்படுத்துகிறீர்கள் என்றும் பெரும்பான்மையைத் தடுக்கிறீர்கள் என்றும் அர்த்தமாகும்.
பெரும்பான்மையானவர்கள் அமளியில் ஈடுபடுவதில்லை. சிறுபான்மையாக, குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் எம்.பி.க்களே அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டு, அவையை ஒத்திவைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலையை ஏற்படுத்துகின்றனர். இதை ஏற்கவே முடியாது.
ஓராண்டில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரானது சில வாரங்கள் மட்டுமே நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமானால் நீங்கள் வேறு இடங்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எனவே, கடவுளை நினைத்து, உங்கள் கடமையைச் செய்யுங்கள். எந்த ஒரு கட்சியையோ அல்லது தனிநபர்களையோ நான் விமர்சிக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. இடையூறு செய்வது என்பது வழக்கமாகவே மாறிவிட்டது. அது ஏற்கத்தக்கதல்ல.
என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நமக்கு நமது கருத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது. இதில் எந்த நீதிமன்றத்தாலும் தலையிட முடியாது. ஒருவர் மீது ஓர் எம்.பி. அவையில் குற்றம்சாட்டுகிறார் என்றால் எந்த நீதிமன்றமும் அவரை விசாரணைக்கு உட்படுத்த முடியாது.
இப்படிப்பட்ட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளபோது அதை யாரும் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. ஜனநாயகத்தில் விவாதம், கருத்து மாறுபாடு, முடிவு ஆகியவை அவசியம். ஆனால் இடையூறு இருக்கக் கூடாது.
இந்தியாவின் பட்ஜெட் சிறிய அளவிலும், ஐந்தாண்டுத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு சொற்பமாகவும் இருந்தபோது பணம் மற்றும் நிதி ஆகிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவே நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு நேரம் செலவிடப்பட்டது. ஆனால், தற்போது இது போன்ற விஷயங்களை விவாதிக்கவே விடாமல் அமளியில் ஈடுபடுவது சரியல்ல.
எம்.பி.க்களின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு வரியும் விதிக்கப்பட மாட்டாது என்பதோடு எந்தவொரு நிதியையும் நிதித்தொகுப்பில் இருந்து எடுக்க முடியாது. எனவே, நிதி சார்ந்த விவகாரங்களை அவை விவாதித்து பரிசீலிக்காவிட்டால் நமது நாடாளுமன்ற அமைப்பு முறை திறன்வாய்ந்ததாக விளங்க முடியாது என்றார் பிரணாப் முகர்ஜி.
English Summary : Parliament is not the place to conduct Dharna President's Warning.The opposition has repeatedly prevented parliament strongly condemned by President Pranab Mukherjee, to Dharna, the location of which is not strictly said Pranab.
Following the issue of the proposed bill have prevented the opposition of both houses of parliament. Meanwhile, in Delhi, attended by President Pranab Mukherjee at a seminar on electoral reforms. In his speech, without naming the opposition parties in parliament who criticized fray. Mukherjee said: