மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இழப்பு தம்மை துயரக்கடலில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டதாக ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பேரறிவாளன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் என் தாயின் கரம் பற்றிக்கொண்டு ‘கலங்காதீர்கள்' அம்மா. உங்கள் மகன்தான் உங்களுடன் வந்து சேரப்போகிறாரே என பரிவோடு தனது தாயிடம் உரைத்த ஜெயலலிதாவின் மரணம் தன்னை கலங்க வைத்துள்ளதாக பேரறிவாளன் குறிப்பிட்டுள்ளார். 23 ஆண்டுகால தன்னலம் கருதா தியாகத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தருணமாக அது இருந்தது என அற்புதம்மாள் - ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பை பேரறிவாளன் நினைவுக் கூர்ந்துள்ளார். 2011-ஆம் ஆண்டு மூவர் உயிர்காக்க இயற்றப்பட்ட சட்டப்பேரவை தீர்மானத்திலும், 2014-இல் ஏழு பேரின் விடுதலை தீர்மானத்திலும் அவர் கையாண்ட ” திருவாளர்கள்” என்ற சொல்லின் ஆழமும், அது சொல்லி சென்ற கதைகளும் ஏராளம் என பேரறிவாளன் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மூவர் தூக்கு, எழுவர் விடுதலை மட்டுமல்லாமல் ஈழ விடுதலை,காவிரி விவகாரம், முல்லை பெரியாறு நீர் பங்கீடு என மக்கள் சார்ந்த பிரச்னைகளில் அவர் போராடிய விதம் எவருக்கும் வாய்த்திராத வரம் என்றும், சாமானிய மக்களுக்காகவே வாழ்ந்து, மக்களுக்காகவே செயலாற்றி, மக்கள் பணியிலேயே உயிர் துறந்துள்ளார் ஜெயலலிதா என பேரறிவாளன் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது கைகளால் விடுதலை பெற்று அவருக்கு நன்றி கூற வேண்டும் என்ற தன் பெருங்கனவு தளர்ந்திருப்பதாகவும் பேரறிவாளன் கூறியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தை நீங்கள் மேலும் படிக்க...
English Summary:
The loss of the former Chief Minister late Rajiv Gandhi assassination case who had gone worried putting the accused are in jail, said Wise sad.