புதுடில்லி : அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு:
இதுதொடர்பாக ஆந்திரத்தைச் சேர்ந்த ரவிகிரண் சிங் என்பவர் தொடுத்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தேர்தல் நேரங்களில் பிரசாரங்கள் எழுதப்பட்ட பிளாஸ்டிக் பேனர்கள், கொடிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன் அவை குப்பையில் சேர்வதால் சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்துகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தலில் போட்டியிடுபவர்களும் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்களை பயன்படுத்துவதை தடுக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். மீறி பிளாஸ்டிக் கொடிகளை பயன்படுத்துபவர்களுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும். இவ்வாறு தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உத்தரவு:
இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர் குமார், அரசியல் கட்சிகள் பிளாஸ்டிக் கொடிகள், பேனர்கள் பயன்படுத்துவதை தடை செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ 6 மாதங்களுக்குள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
English summary:
NEW DELHI : Political parties and plastic flags and banners, to regulate the use of the National Green Tribunal ordered the government to take action.