புதுடில்லி: மத்திய அரசின் பணக் கொள்கை குறித்து ஏற்பட்டுள்ள பாதிப்பை எடுத்துரைக்க காங்., இடதுசாரி உள்ளிட்ட எதிர்கட்சி குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து தெரிவித்தனர்.500, 1000 செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து எதிர்கட்சியினரின் அமளியால் பார்லி., குளிர் கால கூட்டத்தொடர் முழுவதும் வீணாகி போனது. மேலும் விவாதம் நடத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இந்நிலையில் எதிர்கட்சி எம்.பி.,க்கள் இன்று ஜனாதிபதியை சந்தித்தனர்.
பார்லி.,யில் பண விவகாரம் தொடர்பாக தங்களுக்கு பேச அனுமதி கிடைக்கவில்லை என்றும் , விவாதம் நடத்த அரசு மறுக்கிறது என்றும் இது ஜனநாயக விரோத செயல் என்றும் கூறியுள்ளனர்.
இந்த குழுவில் சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.

English Summary:
NEW DELHI: Congress to represent the impact of the monetary policy of the Central Government., Left-wing groups, including the opposition, met with the president said.