வாஷிங்டன் - அதிபர் ஒபாமா பதவியேற்று 8 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில் அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான இடத்தில் நிலை கொண்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சிக் குறியீடு 3.2 சதவீதமாக உயர்ந்துள்ளது வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வரலாறு காணாத அளவுக்கு 4.6 சதவீதமாக உள்ளது. 2007 ஆம் ஆண்டிற்கு பிறகு முதன் முறையாக இந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
புதிய வேலை வாய்ப்புக்கள் :
நவம்பர் மாதத்தில் 1 லட்சத்து 78 ஆயிரம் புதிய வேலைகளுக்கு ஆட்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அமெரிக்கப் பொருளாதாரம் வலுவான நிலையில் இருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.மருத்துவம், கட்டுமானம், அரசு , வணிகம் மற்றும் சேவைத் துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.அதிபர் புஷ் ஆட்சியின் இறுதியில் கடுமையான பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகள் பறிபோகின. உற்பத்தி துறை நிறுவனங்கள் மெக்சிகோ, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, தொழிற்சாலைகளுக்கு மாற்றின.வீட்டுக் கடன் பிரச்சனைகளால் வங்கிகள் திவாலாகிக் கொண்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக கார் உற்பத்தி நிறுவனங்களும் கடும் பின்னடைவைச் சந்தித்தன. தொடர்பான மற்ற துறைகளிலும் மந்த நிலை ஏற்பட்டு கடுமையான பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டது.
ஒபாமா உதவிக்கரம் :
அமெரிக்காவை மீட்டெடுத்த ஒபாமாவங்கிகளுக்கும் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கும் ஒபாமா அரசு உதவிக் கரம் நீட்டியதால், இரு துறைகளும் விரைவில் மீண்டு வந்தன. மேலும் பல நடவடிக்கைகளால் பொருளாதார தேக்கத்திலிருந்து மீட்டு நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு வந்தார் ஒபாமா.அதன் விளைவாக தற்போது வலுவான நிலையில் அமெரிக்க பொருளாதாரம் உள்ளதாக வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிபர் ஒபாமா கொடுத்துள்ள பரிசு என்றே கூறுகின்றனர்.கடுமையான நடவடிக்கைகள் மூலம் உற்பத்தி நிறுவனங்களை அயல் நாடுகளுக்கு இடம் பெயராமல் தடுப்பேன் என்று சூளுரைத்து ஆட்சியைப் பிடித்துள்ளார். மேலும் குடியேற்றச் சட்டத்திலும் சீர்திருத்தம் கொண்டுவருவதும் அவரது முக்கிய லட்சியம் ஆகும்.சட்டபூர்வமற்றவர்களை வெளியேற்றுவது, குடியேற்றச் சட்டத்தை கடுமையாக்கி புதிதாக குடியேறுபவர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்று பல திட்டங்களை முன் வைத்துள்ளார்.
அமெரிக்கர்களுக்கு கூடுதல் வாய்ப்பு :
குறிப்பாக ஹெச் 1 விசா, மற்றும் க்ரீன் கார்டு விண்ணப்பங்களில் முறைகேடுகள் நடப்பதை நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் மூலம் அதிக ஊதியம் கொடுக்கும் ஐடி உட்பட்ட புதிய தலைமுறை வேலைவாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு கூடுதல் வாய்ப்பு கிடைக்கும் என ட்ரம்ப் நம்புகிறார்.ஒபாமா விட்டுச்செல்லும் வலுவான பொருளாதார நிலையை மேலும் வளப்படுத்துவாரா அல்லது ட்ரம்பின் கொள்கைகள் எதிர்மறையாக மாறுமா என்பது பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
English Summary : President Obama regime's accomplishments: At the peak of the US economy.President Obama took office at the time of the completion of 8 years the US economy has a strong position in the space. Economic Growth Index rose by 3.2 per cent in the number of unemployed has dropped an unprecedented 4.6 percent. After 2007, the first time this has been much reduced.