சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், வேதா இல்லத்தில், தனியார் செக்யூரிட்டி நிறுவன பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை, போயஸ் கார்டன் பகுதியில், ஜெயலலிதாவும், அவரது தாயும் சேர்ந்து, வேதா இல்லம் என்ற வீட்டை, 1967ல் கட்டினர். விடுதலை புலிகள் அச்சுறுத்தல் காரணமாக, ஜெயலலிதாவிற்கு இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி வந்தது. இவர்களை தவிர, முதல்வர் என்பதால், ஜெயலலிதா தங்கிய போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டு வந்தது.
டிச., 5ம் இரவு, 11:30 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மரணமடைந்தார். அவரது உடல், போயஸ் கார்டன், வேதா இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, பின் ராஜாஜி ஹாலில், மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. டிச.,6ம் தேதி மாலை அவரது உடல் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர்., நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன் பிறகு, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த இஸட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு திரும்ப பெற்றது.
தனியார் செக்யூரிட்டி:
போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சசிகலா தொடர்ந்து வசித்து வருகிறார். அவர் கட்சியிலோ, ஆட்சியிலோ எந்த பொறுப்பிலும் இல்லை. இருப்பினும், போயஸ் கார்டன், வேதா இல்லத்திற்கு, 250 போலீஸ் பாதுகாப்பு எதற்காக போடப்பட்டுள்ளது என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இந்த சூழ்நிலையில்,போயஸ் கார்டன், வேதா இல்லத்திற்கு,‛ லிங்க் செக்யூரிட்டி ஏஜென்சி' என்ற தனியார் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரு நாளைக்கு, மூன்று ஷிப்ட் என, 216 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கிருந்த போலீசாரின் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
English summary:
Chennai: Late Chief Minister Jayalalithaa's Poes Garden, Veda homes, private security enterprise security laid. Chennai, Poes Garden area Jayalalithaa, accompanied by her mother, the House Veda House, built in 1967. Due to the threat of the LTTE, Jayalalithaa Z-plus security provided by the government. Apart from these, since the Chief Minister, Jayalalithaa's Poes Garden Veda staying at the residence was given additional police protection.