புதுச்சேரி: வர்தா புயல் நாளை மதியம் ஆந்திரா சென்னை இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், புதுச்சேரி கடற்கரையில் 8 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி கடற்கரையில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. காரைக்காலிலும் கடல் சீற்றமாக காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் மீட்டு படையினர் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
வெளியேற வேண்டும்:
இந்நிலையில், கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் என்பதால், பொது மக்கள் புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடற்கரையோரத்தில் இருக்கும் மக்கள், உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

English Summary:
Pondicherry: varta storm tomorrow afternoon is to cross the border between Andhra Pradesh and Chennai. Thus, the number 8 in Pondicherry beach storm warning is loaded cage. In this case, the Pondicherry beach sea is furious. There are reports that karaikkalilum furious sea. Consequently, the authorities and the recovering soldiers have been sent to the spot. They are monitoring the situation there.