சென்னை: ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே., நகர் சட்டசபை தொகுதி உறுப்பினர் இன்றி காலியாக இருப்பதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் அறிவித்தார்.
ஆர்.கே. நகர் தொகுதி காலி:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே. நகர்) சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடல்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா டிச., 5 ம் தேதி காலமானார்.
இதையடுத்து, அவருடைய தொகுதி உறுப்பினர் இன்றி காலியாக இருப்பதாக சட்டசபை செயலர் ஜமாலுதீன் இன்று அறிவித்தார். இதுதொடர்பாக, தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பினார்.
6 மாதத்திற்குள் தேர்தல்:
தேர்தல் கமிஷன் விதிகளின்படி, சட்டசபை உறுப்பினர் ராஜினாமா செய்தாலோ அல்லது மரணம் அடைந்தலோ சட்டசபை செயலர் அறிவிப்பு வெளியிட்ட பிறகு 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய எம்.எல்.ஏ.,வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்நிலையில், ஆர்.கே., நகர் தொகுதிக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary:
Chennai: Jayalalithaa following the death of RK, member of the city assembly seat assembly secretary Jamaluddin without being declared vacant.