புதுடில்லி : கடந்த ஒரு மாதமாக நாடு முழுவதும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ. 2600 கோடி கணக்கில் வராத பணமும், ரூ.300 கோடிக்கும் மேற்பட்ட பதுக்கல் பணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோடி கணக்கில் சிக்கிய பணம் :
பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக நவம்பர் 8 ம் தேதி மத்திய அரசு அறிவித்த பிறகு நாடு முழுவதும் சுமார் 586 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரூ.300 கோடிக்கும் மேலான பணம் பதுக்கல் காரர்களிடம் இருந்தும், ரூ.79 கோடி மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுக்களும், கணக்கில் வராத ரூ.2600 கோடியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தமிழகத்தில் ஒரே சோதனையில் ரூ.100 கோடிக்கும் மேல் பணம் சிக்கி உள்ளது. தமிழகத்தில் மட்டும் இதுவரை ரூ.140 கோடிக்கும் அதிகமான பணம், ரூ.52 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சிக்க வைத்த சிசிடிவி கேமிரா :
இது தவிர டில்லி, புனே, பானாஜி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் புனேயில் வங்கி லாக்கர்களில் பல கோடி மதிப்பிலான கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. கம்பெனி ஒன்றிற்கு சொந்தமான 2 லாக்கர்களில், ஒன்றில் ரூ.9.85 கோடியும், மற்றொன்றில் ரூ.94.50 லட்சமும் வைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கம்பெனி ஊழியர் ஒருவர் 12 முறைகளுக்கு மேல் எடுத்து ரூ.50,000 வரையிலான பழைய நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்றி உள்ளார். இதனை வங்கி சிசிடிவி கேமிரா பதிவின் மூலம் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
English summary:
New Delhi: Income Tax raids carried out across the country over the past month at Rs. 2600 crore of unaccounted money, hoarding money and found more than Rs 300 crore.