திருவள்ளூர்: வர்தா புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள 30 மீனவ கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.வர்தா புயல் மதியம் 12 மணி முதல் நகரத்துவங்கி மாலை 3.30 மணியளவில் புயலின் மையப்பகுதி பழவேற்காடு அருகே கரையை கடந்து சென்றது. இதன் காரணமாக மழை மற்றும் சூறாவளி காற்று பலமாக வீசியது.
இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, மிஞ்சூர், திருத்தணி, திருவள்ளூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், சோழவரம், எண்ணூர், திருவேலங்காடு பகுதியில் மழை பெய்தது. இங்குள்ள பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேராடு முறிந்து விழுந்தன.
பொன்னேரி அருகே மீனவ கிராமமான பழவேற்காட்டில் உள்ள ஏரியும், கடலும் இணையும் முகத்துவாரத்தில் தண்ணீர் சுழற்சி இன்று வழக்கத்திற்கு மாறாக மாறியது. கடல்நீர் உள்வாங்குதலே அதிகம் இருந்தது. இதனால் கடல் நீர் வெள்ளமாக வெளியேறி இங்குள்ள 30 கிராமங்களுக்குள் புகுந்தது. இதனால் பலரும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்டு கொண்டு வரும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. பலர் மீட்கப்பட்டுள்ளனர்.
English summary:
Tiruvallur Tiruvallur district varta cyclone in Palavetkadu heavy damage due to the storm. The storm in the afternoon 12 to 30 fishing villages cut. citybank evening at 3.30 pm on the first landfall of the storm's center passed near Pulicat. As a result, there was heavy rain and hurricane winds