தமிழக தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் அலுவலகத்தில், வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது, கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என, அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யான, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திடீர் அறிக்கை:
இது தொடர்பாக, அவர் வெளியிட்டதாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை குறித்த மர்மங்கள் குறித்துத்தான், இப்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்த அறிக்கை, எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையே அல்ல; அவர் பெயரில், சசிகலாவுக்கு வேண்டப்பட்ட சிலர் வெளியிட்ட அறிக்கை என, பரபரப்பு கிளப்புகின்றனர்.
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: தமிழகத்தின் முன்னாள் தலைமை செயலர் ராம் மோகன் ராவ் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும், அலுவலகங்களிலும் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனைகள், கூட்டாட்சி தத்துவத்தின் சில அடிப்படைக் கேள்விகளை எழுப்புகின்றன.வருமான வரித் துறையின் சோதனையின் போது, மாநில அரசின் காவல் துறையின் உதவியை கேட்டு பெற்றிருக்க முடியும். கூடவே, துணை ராணுவத்தினரை கூட்டி சென்றிருக்கலாம். ஆனால், துணை ராணுவத்தை மட்டும் கூட்டி செல்வது, ஒட்டுமொத்த மாநிலமும் நம்பகத்தன்மையற்றது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தவறான பின்பற்ற கூடாத முன் உதாரணம். தமிழக அரசு பணியாளர் மீது, நடவடிக்கை எடுக்க, சி.பி.ஐ.,க்கு, எந்த அதிகாரமும் இல்லை. இந்த சோதனையை ஏற்க முடியாது. ஒரு மாநில பணியாளரின் அத்துமீறல்கள் தெரியவந்தால், சி.பி.ஐ., சம்பந்தப்பட்ட மாநிலத்திற்கு தகவல்கள் அனுப்ப முடியும். இதை தவிர, சி.பி.ஐ.,க்கு எந்த அதிகாரமும் கிடையாது.
இவ்வாறு அந்த அறிக்கையில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் கூறியிருப்பதுத்தான், இப்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த அறிக்கை மீது சந்தேகம் கொள்கிறவர்கள் வைக்கும் வாதம் இதுதான். முதலில் அறிக்கையில் விவரங்கள் தவறாக உள்ளன. ராம் மோகன் ராவ் மீது நடவடிக்கை எடுத்திருப்பது வருமான வரித் துறைதான்; சி.பி.ஐ., அல்ல.
இந்த சாதாரண விஷயம் கூட தெரியாமலா எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் அறிக்கை விட்டார் என கேள்வி எழுப்புகின்றனர்; அதில் நியாயமும் உள்ளது. காரணம், இந்த அடிப்படையான விஷய ஞானம் தெரியாதவரல்ல அவர். ஏற்கனவே நிதித் துறை இணையமைச்சராக இருந்து, நிதித் துறை மற்றும் சி.பி.ஐ., இரண்டையும் நிர்வகித்தவர். இப்படி இருந்ததாலேயே அவர் பெயரில் அறிக்கை வருவது வலுவாக இருக்கும் என்று சிலர் யோசித்ததில் தவறில்லை. ஆனால், இப்படி வருமான வரித் துறைக்கு பதிலாக சி.பி.ஐ., என கூறி சொதப்பி இருக்க வேண்டியதில்லை.
தற்போதைய அ.தி.மு.க., சசிகலா பிடியில் போய்க் கொண்டிருக்கும் சூழலில், அவரை ஆதரிப்பதில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் போன்றவர்களுக்கு விருப்பம் இல்லை. அப்படி இருக்கும் போது, சசிகலாவின் ஆதரவாளரான ராம மோகன் ராவுக்கு சப்பை கட்டு கட்டி, பாலசுப்பிரமணியன் அறிக்கை விட வாய்ப்பில்லை. அதுமட்டுமல்ல; ஜெயலலிதா உடல்நிலை சரியில்லாத சூழ்நிலையில், அவர் பா.ஜ., தலைவர்கள் சிலரை சந்தித்ததாகவும், அ.தி.மு.க., தரப்பு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் செய்திகள் பரவின.
ஜெயலலிதா மறைவுக்குப் பின், பலரும் போட்டிப் போட்டுக் கொண்டு சசிகலாவை சந்தித்து, கட்சியின் பொதுச் செயலர் பதவியை ஏற்க வேண்டும் என அழைப்பு விடுக்கும் சூழலில், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மட்டும் அமைதியாகவே இருந்தார். இப்போது திடுமென சசிகலாவுக்கு ஆதரவளிப்பது போல அறிக்கையில் சில இடங்களில் சுட்டிக்காட்டப்படும் விவரங்கள் சொல்வதும் சந்தேகத்தை கிளப்புகிறது. குறிப்பாக, தமிழக பல்கலைக் கழக துணை வேந்தர்கள், ஜெயலலிதா மறைவுக்குப் பின், துக்கம் விசாரிக்க சசிகலாவை தேடிச் சென்று சந்தித்தனர். இந்த நிகழ்வு குறித்து, பல மட்டங்களிலும், சர்ச்சை கிளம்பி இருக்க, அந்நிகழ்வு தவறில்லை என்பது போல, அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதும், சந்தேகத்தை கிளப்பி உள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
English summary:
Ram Mohan Rao, who was in the office of the Chief Secretary of Tamil Nadu, was conducted by the Income Tax department, as opposed to the federal theory, Digg, a Rajya Sabha MP, checking, S.R.Balasubramain said.