சென்னை: சென்னை, போரூர் ராமசந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராம மோகன் ராவ், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.‛மணல் மாபியா'வும், போயஸ் கார்டன் வட்டாரங்களுக்கு நெருக்கமானவருமான சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலங்கள், அவரது நெருங்கிய கூட்டாளிகளின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, 130 கோடி ரூபாய் ரொக்கம், 171 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து, தலைமை செயலாளராக இருந்த ராம மோகன் ராவ், அவரது மகன் விவேக் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள், அவர்களின் கூட்டாளிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். தலைமை செயலகத்தில் இருந்த ராம மோகன் ராவ் அறையிலும் சோதனை நடத்தப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில்:
இதன் காரணமாக, தலைமை செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன் ராவ் நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். சம்மன் அனுப்பி அவரிடமும், அவரது மகனிடமும் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் தயாராகி வந்த போது, திடீரென கடந்த, 24ம் தேதி சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் ராம மோகன் ராவ் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்கை அளிக்கப்பட்டு வருகிறது என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சூழ்நிலையில், ராம மோகன் ராவ் இன்று காலை சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இன்று மாலை அவர், ‛டிஸ்சார்ஜ்' செய்யப்படலாம் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தாலும், வருமான வரித்துறையினரின் கிடுக்கிப்பிடியில் இருந்து தப்பிக்க, மேலும் சில நாட்களுக்கு ராம மோகன் ராவ் மருத்துவமனையில் தொடர்ந்து இருப்பார் என்றும் தகவல்வெளியாகி உள்ளது.
English summary:
Chennai: Chennai, Porur Ramachandra Rama Mohan Rao, who is receiving treatment at the hospital, in the ICU, this morning transferred to the normal ward