சென்னை : தமிழக அரசின் தலைமை செயலர் ராம மோகன ராவ், வீட்டில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை முடிந்தது; அதிகாரிகள் சோதனையை முடித்து புறப்பட்டனர்.
ரெய்டு :
தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன ராவ், 58, வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று அதிகாலை முதல் அதிரடி ரெய்டு நடத்தினர். அவரது வீடு மற்றும் கோட்டையில் உள்ள அவரது அலுவலகம் உட்பட, 12 இடங்களில், அதிரடியாக சோதனை நடந்தது. இச்சோதனையின் போது, பாதுகாப்பு பணியில், துணை ராணுவம் ஈடுபட்டது.
அதிகாரிகள் புறப்பட்டனர் :
அண்ணாநகரிலுள்ள ராவ் வீட்டில் விடிய விடிய சோதனை தொடர்ந்தது. வருமான வரித்துறை உயரதிகாரிகள் இன்று அதிகாலையில் வந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராவ் வீட்டில் 24 மணி நேரமாக நடந்த சோதனையை முடித்துக் கொண்டு அதிகாரிகள் புறப்பட்டனர். தொடர்ந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் புறப்பட்டு சென்றனர். ரெய்டில் சிக்கிய ஆவணங்களை அதிகாரிகள் உடன் எடுத்து சென்றனர்.
5 இடங்களில் சோதனை நிறைவு :
ராவ் வீடு, மகன் விவேக் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நிறைவடைந்தது. மற்ற 8 இடங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ராவ் மகன் விவேக்கை, விசாரணைக்காக திருவான்மியூர் வீட்டிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். நந்தனத்திலுள்ள மகன் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.
English summary:
Chennai: Tamil Nadu Chief Secretary mokana Rama Rao, the home, the income tax department had conducted the test; Officials set out to finish the test.