சென்னை: தமிழகத்தின் தலைமை செயலராக இருந்த ராம மோகன ராவின் மகன் விவேக்கிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
சோதனை:
சென்னை, கிழக்கு அண்ணா நகரில் உள்ள, ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில், வருமான வரித் துறையினர், அதிரடி சோதனை நடத்தினர். அதே நேரத்தில்,திருவான்மியூர், ராஜாஜி நகரில் உள்ள, அவரது மகன் விவேக்கின் சொகுசு பங்களா; தேனாம்பேட்டையில் உள்ள, 'விர்து' என்ற விவேக்குக்கு சொந்தமான நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணை:
இந்நிலையில், விவேக்கிற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். நுங்கம்பாக்கம் அலுவலகத்தில் இன்று மாலை நேரில் ஆஜராக விவேக்கிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சோதனையின் போது சிக்கிய முக்கிய ஆவணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
English summary:
Chennai: Tamil Nadu Chief Secretary Rama Rao's son vivek mokana income tax authorities have issued notices.