சென்னை: வர்தா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்யத் தயாராக இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று (திங்கள்கிழமை ) மாலை 4.30 மணிக்கு தொலைபேசியில் பேசிய அவர், வர்தா புயல் பாதிப்பு குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இன்று மாலை 4.30 மணிக்கு தொலைபேசியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வர்தா புயலால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார்.
வார்தா புயல் வரும் என்பது அறிந்து அதனை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. புயல் பாதிப்புகளைக் கண்டறிந்து மீட்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து ஏற்பாடுகளும் தயார்:
முன்கூட்டியே கணிக்கப்பட்டு பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.ஆர்.டி.எப்.), மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்.டி.ஆர்.எப்.) ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன. இதுதவிர தரைப்படை, விமானப் படை, கப்பல் படை வீரர்களும், கடலோரப் பாதுகாப்புப் படை வீரர்களும் தயார் நிலையில உள்ளனர்.
மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசு நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகிறது" என ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என முதல்வரிடம் ராஜ்நாத் சிங் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே புயல் பாதித்த எண்ணுர்,திருவெற்றியூர். உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English Summary:
O.Pannerselvam Chief Minister today (Monday) at 4.30 pm, he spoke on the phone, varta heard details about the influence of the storm. vardha storm coming, knowing that it was kept in a state of readiness to confront the government. Identify the effects of the storm rescue, relief and rehabilitation to make a senior IAS. Officials appointed.