புதுடில்லி: கான்பூர் அருகே ரயில் தடம்புரண்டதில் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
விசாரணை:
இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தி, எதிர்பாராமல் அஜ்மீர் - சியால்தா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டதை தொடர்ந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறேன். சம்பவ இடத்திற்கு விரைவாக செல்லுமாறு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்குமாறும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தர உத்தரவிடப்பட்டுள்ளது. ரயில் தடம்புரண்டது தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். அனைத்து பயணிகளுக்கும் தேவையான உதவிகள் செய்து தரப்படும் எனக்கூறினார்.
சிகிச்சை:
மேலும் அவர் தேவையான உதவிகள் செய்து தர உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு மருத்துவ வேன்கள், நிவாரண வேன்கள் விரைவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. டாக்டர்கள் நன்கு சி்கிச்சை அளித்து வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்குவதற்காக மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுகிறோம்
பயணிகள் இடையூறு இல்லாமல் பயணத்தை தொடர மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
English summary:
India train derailment injured near Kanpur Central Railway Minister Suresh Prabhu said that given appropriate relief.