ஹைதராபாத், வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் குறித்த ஓர் ஆய்வறிக்கையில், அதிகரித்து வரும் கடல் வெப்பமே ஆந்திரா, தமிழக பகுதிகளில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகின்றன என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'எர்த் சயின்ஸ் அண்ட் கிளைமேடிக் சேஞ்ச்' என்ற பத்திரிகையில் ஓர் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் அந்த அறிக்கை வெளியிடப்பது. அதில், அதிகரித்து வரும் கடல் வெப்பமே ஆந்திரா, தமிழக பகுதிகளில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாவதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் முக்கிய பங்குவகித்த அலகாபாத் பல்கலைக்கழக பேராசிரியர் அசுதோஷ் மிஸ்ரா, "வங்கக் கடல் பகுதியில் சமீப காலத்தில் அதிகளவில் புயல்கள் ஏற்படுகின்றன. 1891-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை தாக்கிய புயல்களில் புள்ளிவிவரங்களை தொகுத்து ஆராய்ந்தபோது மே, அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 4 மாதங்களில் தமிழகம், ஆந்திர கடல்பரப்பில் புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்மைக்காலங்களில் புயல்களின் எண்ணிக்கையைவிட அதிதீவிர புயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதாவது முன்பெல்லாம் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் புயலாக உருவாகும். ஆனால், அவற்றின் தாக்கம் கரையைக் கடக்கும்போது சற்று குறைவாக இருக்கும். ஆனால், கடல் வெப்பம் அதிகரிப்பதால் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் தீவிர புயல்கள் பல சற்றும் வலுவிழக்காமல் தீவிர புயலாகவே கரையைக் கடந்துவிடுகின்றன. இதனால், தாக்கம் அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக நவம்பர் மாதத்தில் அதிகளவில் தீவிர புயல்கள் உருவாகின்றன. தோராயமாக ஒவ்வோர் ஆண்டும் வங்கக் கடலில் நவம்பர் மாதத்தில் 5 முதல் 6 புயல்கள் உருவாகின்றன. அவற்றின் வேகம் 34 நாட் என்றளவில் இருக்கிறது. சில புயல்களில் காற்றின் வேகம் இன்னும் அதிகமாக இருக்கிறது. அதாவது 48 நாட் என்றளவில் இருக்கிறது" எனக் கூறியுள்ளார்.
கடந்த 25 ஆண்டுகளாக வங்கக்கடலில் உருவாகும் பெரும்பாலான புயல் தீவிர புயலாகவோ அல்லது அதிதீவிர புயலாகவோ இருக்கின்றன என புவி அறிவியல் துறை அமைச்சர் மாதவன் ராஜீவன் தெரிவித்துள்ளார். பெரும்பாலும் புயல்கள் உருவாகாத அரபிக்கடலிலும்கூட அண்மைக் காலங்களில் குறைந்த காற்றழுத்தங்கள் அவ்வப்போது உருவாகி வருவதாக அவர் கூறினார்.
கடந்த 30 ஆண்டுகளில் சமுத்திரங்களின் வெப்ப நிலை அதிகரித்துள்ளதாக நேச்சர் கிளைமேட் சேஞ்ச் என்ற ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே, அடிக்கடி புயல் உருவாவதற்கு காரணமாக இருக்கிறது. மேலும், தொழில்மயமாக்குதல் கடல் வெப்ப அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக இருப்பதோடு புயல்களின் திசைகள் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அதிக பங்குவகிக்கின்றன என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary : Rising sea temperatures in the Tamil Nadu-Andhra Pradesh cyclones.
In a paper on storms that form in the Bay of Bengal, increasing ocean heat of Andhra Pradesh, Tamil Nadu and parts of the report said that by more intense storms.
"Earth Science and climatic Change 'published a paper in the journal. In the year 2014 on the basis of a study published in the report. In addition, increasing ocean heat of Andhra Pradesh, Tamil Nadu, has been the cause of more intense storms in parts.