தமிழகத்தில், சில நாட்களாக, '10 ரூபாய் நாணயங்கள் செல்லாது' என, புரளி கிளம்பியதை அடுத்து வணிகர்கள், அரசு பஸ்களில் இந்நாணயங்களை வாங்க மறுத்து வருகின்றனர்.
சுற்றறிக்கை :
இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 10 ரூபாய் நாணயத்தின் வடிவம், எடை, டிசைன், எந்த ஆண்டில், யார் நினைவாக அச்சடிக்கப்பட்டது போன்ற விபரங்களை அளித்து, வங்கிகள், தங்கள் பகுதி வணிக நிறுவனங்களில் விழிப்புணர்வு நோட்டீசாக ஒட்ட உத்தரவிட்டுள்ளது. மேலும், 2010ல் தான், 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டது எனவும், அதன்பின், தலைவர்களின் நினைவாக, அடுத்தடுத்த ஆண்டுகளில், நாணயம் அச்சடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
செல்லும் :
கடைசியாக, ஜூன், 22ல், சுவாமி சின்மயானந்தா நுாற்றாண்டு விழா நினைவாக, 10 ரூபாய் நாணயம் அச்சடிக்கப்பட்டு உள்ளது. எனவே, தயக்கமின்றி, 10 ரூபாய் நாணயங்களை வாங்கிக் கொள்ளலாம் என, அறிவித்துள்ளது. மேலும், சில்லரை தட்டுப்பாட்டை போக்க, பாரத ஸ்டேட் வங்கிகளுக்கு, 10 ரூபாய் நாணயங்கள், 15 லட்சம் ரூபாய்
மதிப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
English summary:
In Tamil Nadu, for a few days, 10 Rupees coins void ', as traders hoax after her departure, the government buses has refused to buy coins.