பெங்களூரு, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு ரூ.100 கோடி கறுப்பு பணத்தை மாற்றிக்கொடுத்த அரசு அதிகாரி உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெல்லாரி ரெட்டி சகோதரர்களில் ஒருவரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி கடந்த 2008-ம் ஆண்டு கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் சுற்றுலாத் துறை அமைச்சராக பதவி வகித்தார். 30-க்கும் மேற்பட்ட சட்ட விரோத சுரங்க வழக்குகளில் சிக்கியுள்ள இவர், கடந்த ஆண்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி கடந்த நவம்பர் 16-ம் தேதி பெங்களூரு அரண்மனையில் ரூ.650 கோடி செலவில் தன் மகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கை யால் நாட்டு மக்கள் அன்றாட தேவைகளுக்காக தவிக்கும் நிலையில் திரைப்பட பாணியில் பிரமாண்டமாக திருமணம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே வருமான வரித்துறை அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி, திருமண செலவுக்கு எங்கிருந்து பணம் வந்தது என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் பெங்களூரு நில கையகப்படுத்தும் கேஏஎஸ் (கர்நாடக ஆட்சி பணி) அதிகாரி பீம நாயக்கின் கார் ஓட்டுநர் ரமேஷ் கவுடா (30) கடந்த 6-ம் தேதி மண்டியாவில் உள்ள தனியார் விடுதியில் தற்கொலை செய்துகொண்டார்.
இறப்பதற்கு முன்பாக ரமேஷ் கவுடா, ''கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, பெல்லாரி பாஜக எம்பி ஸ்ரீராமலு ஆகியோருக்கு பீம நாயக் ரூ.100 கோடி கறுப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றிக் கொடுத்தார். இதற்காக பீம நாயக் 20 சதவீதம் கமிஷன் பெற்றார். இது தொடர்பாக எனக்கு தெரிந்ததால் பீம நாயக், அவரது ஓட்டுநர் முகமது ஆகியோர் என்னை தாக்கினர்'' என 11 பக்க கடிதம் எழுதியுள்ளார்.
இதையடுத்து மண்டியா போலீஸார் பீம நாயக், முகமது ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, தலைமறைவான பீம நாயக், முகமது ஆகியோரை தேடி வந்தனர். இருவரும் சிக்காததால் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு ஆந்திரா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் தேடுதல் பணி தொடர்ந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு சிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில் பீம நாயக், முகமது ஆகிய இருவரும் குல்பர்காவில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து குல்பர்கா போலீஸார் நேற்று முன் தினம் இரவு இருவரையும் கைது செய்தனர். நேற்று காலை மண்டியா கொண்டுவரப்பட்டு அங்குள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது சிஐடி போலீஸார் தரப்பில் இருவரையும் விசாரிக்க வேண்டும் என கோரியதால் நீதிமன்றம் பீமநாயக், முகமது இரு வரையும் போலீஸாரின் காவலில் செல்ல அனுமதி அளித்தது. இதையடுத்து சிஐடி போலீஸார் பீம நாயக், முகமது இருவரையும் பெங்களூரு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary : Rs 100 crore, including a government official, 2 others arrested for changing Black Money.Former Karnataka minister Janardhana Reddy changed Rs 100 crore in black money, including a government official, have been arrested.
One of the Bellary Reddy brothers, Janardhana Reddy, the President of the BJP government in Karnataka in 2008. He served as tourism minister. More than 30 cases of illegal miners who are trapped in the last year and released on bail.