புதுடெல்லி - சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலையேற்றத்தைச் சந்தித்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்ந்துள்ளன. புதிய விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு:
பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் ஒபெக் அமைப்பு ஒரு நாளைக்கு சுமார் 12 லட்சம் பேரல் அளவுக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய்யின் விலை சர்வதேச அளவில் கடுமையாக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் 30 ம் தேதி சுமார் 47.25 டாலர் என்ற அளவில் விற்பனையான ஒரு பேரல், தற்போது அதிகபட்சமாக 55.56 டாலர் வரை விற்பனையாகிறது.
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு:
எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மக்கள் அவதி நீங்காத நிலையில், டெபிட், கிரெடிட் கார்டுகளில் பணத்தை செலுத்தினால் பெட்ரோல் நிலையங்களில் சலுகை தரப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்ந்துள்ளன. இந்த புதிய விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. புதிய விலையேற்றத்தின் படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.41க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.58.28க்கும் விற்கப்படும்.
English Summary:
New Delhi - international crude oil met rupees increased , in India, petrol, diesel price hiked. Accordingly, the price of petrol by Rs .2.21 per liter, diesel price per liter rose by Rs .1.79. The new price hike comes into effect from midnight yesterday.