தாண்டேவாடா(சத்தீஸ்கர்) - ரூ50 கோடியில் டிஜிட்டல் கிராமத்தை அமைக்க சத்தீஸ்கர் மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான திட்டத்தை மாநில பா.ஜ.க முதல்வர் ராமன் சிங் நேற்று தொடங்கி வைத்தார். சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் வன்முறைகள் அதிகம் உள்ளன. இந்த மாநிலத்தில் முதல்வர் ராமன் சிங் தலைமையிலான பா.ஜ.க .ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள நக்சல் தீவிரவாதிகள் மத்திய அரசின் பழைய ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பால் நிதிஆதாரம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.
தற்போது தீவிரவாதிகள் சரண் அடைவது கணிசமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நக்சல் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேம்படுத்தவும் ரொக்கமில்லா பரிவர்த்தனையை மேற்கொள்ளவும் ஊக்கப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தவும் சத்தீஸ்கர் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.நக்சல் தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட தாண்டேவாடா மாவட்டம் பல்லார் கிராமத்தை முழுவதுமாக டிஜிட்டல் கிராமமாக ஆக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
இங்கு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், பால் பூத்கள். கால் நடை மருத்துவமனை உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் ஸ்வைப்பிங் எந்திரங்கள் வைபை வசதிகள் செய்யப்படவுள்ளன.நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு நகரத்தில் உள்ள மருத்துவர்களிடம் நேரடி ஆலோசனை பெறும் வகையில் இணைய வசதி செய்யப்படுகிறது.இத்திட்டத்திற்காக ரூ50 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்கிறது. இத்திட்டத்தை மாநில பா.ஜ.க முதல்வர் ராமன் சிங் நேற்று தொடங்கி வைத்தார்
English Summary:
Dantewada (Chandigarh) - Rs 50 crore to set up a digital village, Chandigarh)Chief Minister Raman Singh, BJP state government initiated a program to be decided There are a lot of violence in Chandigarh Naxal extremists. Chief Minister Raman Singh-led BJP in the state is going elected. Naxal extremists in the state of federal Old Rs 500, Rs 1000 notes the Government's announcement that they will not suffer without finance.