
சார்க் மாநாடு ஒத்திவைப்பு :
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பூட்டான் நாடுகளும் புறக் கணித்ததை அடுத்து, சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டது. இது, மாநாட்டு ஏற்பாட்டாளரான பாகிஸ் தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில், சார்க் நாடுகள் அமைப்பின் 31-வது ஆண்டுவிழாவையொட்டி, சார்க் உறுப்பு நாடுகள் மற்றும் அவற்றின் குடிமக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் சார்பில் வெளியிடப்பட்ட வாழ்த்துச் செய்தியில்,
‘சார்க் அமைப்பு தொடர்ந்து நீடிக்கிறது என்றாலும், எதிர்பார்த்த படி, வெற்றியை அடையவில்லை. அதன் கடமைப் பொறுப்புகள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. நம் மக்களின் பொது நன்மைக்காகவும், வளம் மற்றும் சுபிட்சத்துக்காகவும் அளித்த வாக்குறுதிகள் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டன’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
19-வது சார்க் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதற்கு எந்த நாட்டின் பெயரையும் நவாஸ் ஷெரிப் தனது அறிக்கையில் குறிப்பிட்டு குற்றம்சாட்டவில்லை. எனினும், ‘மாநாடு ஒத்திவைப்பால், பிராந்திய ஒத்துழைப்பு, வளம், வளர்ச்சி ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை நம் மக்கள் மீண்டும் ஒருமுறை இழந் துள்ளனர்’ என, நவாஸ் ஷெரிப் குறிப்பிட்டுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் :
பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் நபீஸ் ஜகாரியா கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் சர்வ தேச சமூகம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது. காஷ்மீர் விவகாரத்துக்கு அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீர்வு காண்பார் என்று அந்த நாட்டின் புதிய துணை அதிபர் மைக் பென்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவரது கருத்தை பாகிஸ்தான் வரவேற்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English summary:
Islamabad - 'Sark' system continue to exist. But, according without expecting did not succeed, "said the Pakistani Prime Minister Nawaz Sharif.