சென்னை:‛‛சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் எம்.பி., சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்களை தாக்கியது, கட்சிகாரர்கள் இல்லை,'' என, அ.தி.மு.க.,வின் அமைப்பு செயலாளர் பொன்னையன் கூறியுள்ளார்.
சென்னை, அண்ணாநகரில், இன்று( டிச.,28) பொன்னையன் கூறியதாவது:
அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள், ஆண்டுக்கு ஒரு முறையாவது பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்பது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்று. அதன்படி தான், அ.தி.மு.க,வின் பொதுக் குழு கூட்டம், நாளை நடக்கிறது. பெரும் சர்ச்சைக்கு பிறகு, இந்த கூட்டம் நடக்க உள்ளது என கூறுவது தவறு. இந்த கூட்டத்தில், கட்சியின் அடுத்த பொதுச் செயலாளர் யார் என்பது முடிவு செய்யப்படும். அப்பதவிக்கு இதுவரை யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை; மனுவும் தாக்கல் செய்யவில்லை.
பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வேண்டும் என, கட்சியின் பல்வேறு அமைப்பினர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர் இன்னும் அதற்கு ஒப்புதல் தரவில்லை.
அவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன், 33 ஆண்டுகள் ஒன்றாக இருந்து அரசியல் அனுபவம் பெற்றவர். பொதுச்செயலாளர் பதவி குறித்து சசிகலா புஷ்பா போட்ட வழக்கினால் எந்த சிக்கலும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு தான் பொதுக்குழு கட்டுப்படும்.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் சசிகலா புஷ்பாவின் வழக்கறிஞர்களை தாக்கியது கட்சிகாரர்கள் இல்லை. அது உணர்வுபூர்மான செயல் என்று மட்டும் தான் கூற முடியும்.
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தியது, மாநில அரசு அல்ல. மத்திய அரசு தான் சோதனை நடத்தியது. இந்த விஷயத்தில் கட்சியின் பதில் இது தான்.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என கூறுவது அறவே ஆதாரமற்ற பொய்செய்தி.
இவ்வாறு பொன்னையன் கூறினார்.
English summary:
Chennai: '' in Chennai, AIADMK MPs at headquarters, Sasikala Pushpa hit by the lawyers, not clients, '' as Digg, ponnaiyan secretary of the organization said.