திண்டுக்கல்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணல் கான்டிராக்டர் சேகர் ரெட்டி கூட்டாளிகளான ரத்னம், ராமசந்திரன் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கைது:
நாடு முழுவதும், புதிய ரூபாய் நோட்டுகளுக்காக, வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களில் மக்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் இருந்து, 35 கோடி ரூபாய்க்கு, புதிய ரூபாய் நோட்டுகளை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்; இது தொடர்பான வழக்கில் சேகர் ரெட்டி கைதானார். சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான ரத்தினம், பிரேம்குமார், ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
வீட்டில்:
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஜி.டி.என்., ரோட்டில், சேகர் ரெட்டியின் கூட்டாளியான ரத்னம் என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் சர்வேயராக பணி செய்த ரத்தினம் தற்போது பல கோடி ரூபாய்க்கு அதிபதி. ரியல் எஸ்டேட் தொழில் துவங்கி, மணல் குவாரி ஒப்பந்ததாரராக உருவெடுத்தார்.'மணல் மாபியா' சேகர் ரெட்டியின் தொடர்பு ஏற்பட்டு, அவருக்கு பணம் மாற்றிக் கொடுத்ததாக சி.பி.ஐ., போலீசாரால் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.
அலுவலகத்தில்:
இதேபோல், ரெட்டியின் மற்றொரு கூட்டாளியான, புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மணல் குவாரி அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. நிஜாம் காலனியில் உள்ள அவரது அலுவலகத்தில், வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றன.
English summary:
Shekhar Reddy, the jailed allies sand contractor Ratnam,Ramachandran houses have been raided in the income tax authorities.