சென்னை: மணல் கான்ட்ராக்டர் வேலூர் சேகர் ரெட்டி, சீனிவாசலு ரெட்டி, பிரேம், ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்ட பலரையும், அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததோடு, கணக்கில் காட்டாமல் கறுப்புப் பணத்தை பதுக்கினார்கள் என்று சொல்லி, வருமான வரித் துறையினர், அவர்கள் அவ்வளவு பேர் தொடர்புடைய இடங்களில், தொடர்ச்சியாக ரெய்டு நடத்தியது.
இதில், ஏராளமான பணம் கோடி கோடியாக சிக்கியதோடு, தங்கக் கட்டிகளும் கிலோ கணக்கில் சிக்கின. சேகர் ரெட்டி, முதலீடு செய்துள்ள சொத்துக்கள்; நிறுவனங்கள் அடங்கிய ஆவணங்கள் மட்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது என, வருமான வரித் துறையினர் கூறி, கலங்கடிக்கும் தகவல்களை வெளியிடுகின்றனர்.
இவர்களை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விசாரணையை முடித்த வருமான வரித் துறையினர், அதை அப்படியே, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட, அவர்கள், அத்தனை பேரையும் கைது செய்து, சென்னை, புழல் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். அவர்களை தனி இடத்தில் போலீசார் முழு நேர கண்காணிப்பில் வைத்திருந்தாலும், அவர்கள், வெளியே இருப்பதைப் போலவே சொகுசாக இருப்பதாக, புழல் சிறைத் துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிகின்றன.
இது குறித்து, சிறைத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: புழல் சிறையைப் பொறுத்த வரையில், குற்றம் செய்துவிட்டு உள்ளே வருகிறவர்களுக்கு, அங்கே எந்த துன்பமும் இருப்பதில்லை. வீட்டில் இருப்பது போன்ற எல்லாமே, உள்ளேயே கிடைக்கும். எல்லாமே காசுதான். காசு இருந்தால், உள்ளே கிடைக்காததே இல்லை. உள்ளே செல்போனை அனுமதிப்பதில்லை என்று சொல்கின்றனர். ஆனால், அங்கிருந்து செல்போனில் வெளியே எந்த நேரமும் பேசலாம் என்ற சூழல்தான் உள்ளது. அப்படி இருக்கும்போது, பணத்திலேயே திளைக்கும் சேகர் ரெட்டி போன்றவர்களின் நிலையை கேட்கவும் வேண்டுமா?
அவர்களுக்கு மூன்று வேளை சாப்பாடும் வெளியில் இருந்துதான், புழல் சிறைக்கு கொண்டு வரப்படுகிறது. பழங்களுடன் கூடிய வீட்டு உணவை, சிறையில் இருந்தபடியே சாப்பிடுகின்றனர். தேவைப்பட்டவர்களுக்கு, செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகின்றனர். உள்ளே காவலுக்கு இருக்கும் போலீசார் நன்கு கவனிக்கப்படுகின்றனர். அதனால், சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு, சிறையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. உள்ளே இருக்கும் சேகர் ரெட்டி ஆட்களை சந்திக்க, வெளியில் இருக்கும் தொழில் அதிபர்களும்; ஆட்சி அதிகாரத்தில் உள்ள முக்கியஸ்தர்களும் ஆட்களை அனுப்பி, பேசுகின்றனர்.
சேகர் ரெட்டி ஜெயிலுக்குள் வந்தது முதல், சிறைத் துறை அதிகாரிகளுக்கு தினந்தோறும் போன் செய்யும், ஆட்சி அதிகாரத்தில் உள்ள ஒரு முக்கிய அரசியல் பிரமுகர், அவர்களை நன்றாக கவனிச்சுக்குங்க; நான் உங்களை கவனிச்சுக்குறேன் என்று சொல்லி, தன் வயப்படுத்தி உள்ளார். இவ்வாறு சிறைத் துறை வட்டாரங்கள் கூறின.
English summary:
Chennai: Sand contractor in the Vellore Shekhar Reddy, shenivaslu Reddy, Frame, Ramachandran, gems, including the many, too much wealth heaped account without money laundering saying, Income Tax Department, as they seem more relevant places, repeatedly Raid conducted.