ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பண்ணை குட்டை, சோலார் பம்புசெட் மூலமாக விவசாயம் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் அருகே தினைக்குளத்தை சேர்ந்தவர் ஜவஹீர். இவர், திருப்புல்லாணி அருகே பஞ்சந்தாங்கி கிராமத்தில் 25 ஏக்கரில் மா, தென்னை, வாழை, தானியங்கள், நெல், நிலக் கடலை விவசாயம் செய்கிறார். விவசாயத்தோடு இணைந்து பரண்மேல் ஆடு வளர்ப்பு முறையில் உயர்ரக தலச்சேரி, ஜமுனாபாரி வகை ஆடுகளையும், 10க்கும் மேற்பட்ட கறவை மாடுகள், நாட்டுக்கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளார். கால்நடை உரங்களை பயன்படுத்தி முழுமையாக இயற்கை விவசாயம் செய்கிறார். சுமார் 2 ஏக்கரில் 12 அடி ஆழத்தில் பெரிய பண்ணை குட்டை அமைத்துள்ளார். அதில், ஆண்டு முழுவதும் மழை நீரை தேக்கி விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார். புதுப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம் மற்றும் தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தில் 80 சதவீதம் அரசு மானியத்தில் சோலார் பம்புசெட் அமைத்துள்ளார்.இதற்கான மொத்த செலவு 5 லட்சத்து 1,152 ரூபாய். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் அரசு மானியமாக வழங்கியுள்ளது. சோலார் மோட்டாரை பயன்படுத்தி பகல் முழுவதும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறார்.இவற்றை பார்வையிட்ட கலெக்டர் நடராஜன் கூறுகையில், ''மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 20 'சோலார் பம்புசெட்' அமைக்கப்பட்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கப்படும். வரும், ஆண்டில் 30 விவசாயிகளுக்கு அமைத்து தரப்படும்,'' என்றார்.பஞ்சந்தாங்கியில் விவசாயப்பணிகளை நிர்வகிக்கும் அருள் கூறுகையில், ''நிலத்தடி நீர் உப்பாக உள்ளதால் பண்ணை குட்டை அமைத்து பாசனம் செய்கிறோம். சோலார் பேனல் மூலம் ஐந்தரை குதிரை திறன் கொண்ட மோட்டார் பகல் முழுவதும் இயக்கப்படுகிறது, கறவை மாடுகள், ஆடுகளுக்கு தேவையான பசுந்தீவனங்களை சாகுபடி செய்கிறோம்,'' என்றார்.
English Summary:
Ramanathapuram district pond farming, agriculture is increasing by solar pump set. wall-pond near Ramanathapuram javahir belonged. He tiruppullani pancantanki near the village on 25 acres of mango, coconut, banana, cereals, rice, nuts and agriculture land. Combined with the high quality Thalassery paranmel goat farming, sheep jamunapari category, with more than 10 dairy cows, nattukkoli involved in farming. Is completely natural farming using animal manures.