ராமநாதபுரம் - ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சோலார் மின் பம்பு செட்டுகள் அமைக்க நிதிஉதவி வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 20 விவசாயிகளுக்கு சோலார் மின் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.
80 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் இந்த நிதிவுதவி திட்டத்தின் மூலமாக மா, நெல்லி, சிறுதானியங்கள் போன்ற பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இந்த சோலார் மின்சார பம்பு செட்டுகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் பார்வைட்டார். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 80 சதவீதம் மானியத்துடன் கூடிய சோலார் மின்சார பம்புசெட்டுகளுக்கான மின் இணைப்பு மேலும் 30 பேருக்கு வழங்கப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்த விவசாயிகள் முதலமைச்சருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
English Summary : Solar pumps 80 percent of the set, with a grant financial assistance to farmers: CM thanks to the farming community. Ramanathapuram district, to the benefit of farmers in the form of solar power pumps, thanks to funding provided by the Chief Minister Jayalalithaa said costs to the beneficiaries. The interest of the farmers, the Chief Minister Jayalalithaa has been implementing various welfare schemes. Ramanathapuram district in the last year, 20 farmers were given the power connector for solar power pumps.