சியோல் - தென்கொரிய அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டது.அதன்படி 6 மாதங்களுக்கு அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் அதிபராக நீடிப்பதா, கூடாதா என்பதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் முடிவு செய்யும்.
தோழி கைது :
அதிபர் பார்க் குவைன் ஹையின் நெருங்கிய தோழி சோய் சூன் சில் அண்மையில் ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் கைது செய்யப்பட்டார். அதிபருடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி போலி தொண்டு நிறுவனங்கள் பெயரில் நிதி திரட்டியதாகவும் அரசுப் பணி நியமனங்களில் தலையிட்டதாகவும் சோய் சூன் சில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போராட்டம் :
இந்த ஊழல் விவகாரங் களுக்குப் பொறுப்பேற்று அதிபர் பார்க் குவென் ஹை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூன்று எதிர்க்கட்சிகள் சார்பில் அதிபருக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் கடந்த 3-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
வாக்கெடுப்பு:
அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 300 உறுப்பினர் களில் 234 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். 56 பேர் எதிராக வாக்களித்தனர். 7 ஓட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. 2 பேர் அவையில் ஆஜராகவில்லை. இதன்மூலம் அதிபர் பார்க் குவென் ஹைக்கு எதிரான குற்ற விசாரணை தீர்மானம் பெரும் பான்மை ஆதரவுடன் நிறைவேறி யுள்ளது. இதைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு அவர் தற்காலிக மாக பதவி நீக்கம் செய்யப்பட் டுள்ளார். தற்போதைய பிரதமர் வாங் யோ ஆனிடம் அதிபரின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் இடைக்கால அதிபராக தொடர்வார்.
நீதிமன்றம் விசாரணை நடத்தும்:
குற்ற விசாரணை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தொடர் பாக அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் விசாரணை நடத்தும். 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் 6 நீதிபதிகள் குற்ற விசாரணை தீர்மானம் நியாய மானது என்று தீர்ப்பளித்தால் அதிபர் பார்க் குவென் ஹை நிரந்தரமாக பதவி நீக்கம் செய் யப்படுவார். அதைத் தொடர்ந்து 60 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி புதிய அதிபரைத் தேர்வு செய்ய வேண்டும். ஒருவேளை குற்ற விசாரணை தீர்மானத்துக்கு 6-க்கும் குறைவான நீதிபதிகள் ஆதரவு அளித்தால் அதிபர் பார்க் குவென் ஹை மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்பார்.
English Summary:
Seoul - South Korean President Park Gwen High resolution of the criminal investigation against the majority in the country's parliament to temporarily dismiss resolution within he was 6 months. He has to stay as president, the country's Constitutional Court, which will decide whether or not.