கொழும்பு : ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் மூன்று பேருக்கு டிச.,16 வரை காவல் நீட்டித்து ராமநாதபுரம் நீதிபதி உத்தரவிட்டார். ராமேஸ்வரம் அரிச்சல்முனை முதலாம் தீடை பகுதியில் கடந்த அக்.,22ல் பிளாஸ்டிக் படகுடன் கரை ஒதுங்கிய இலங்கை மீனவர்கள் 3 பேரை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இலங்கை தலைமன்னாரை சேர்ந்த சகோதரர்கள் தேவநேசன், அருள்நேசன் மற்றும் வவுனியா ஓமந்தையை சேர்ந்த விஜி என தெரிந்தது. பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன் பிடித்த போது படகில் டீசல் தீர்ந்ததால் காற்றின் போக்கில் திசைமாறி வந்ததாக தெரிவித்தனர்.இதையடுத்து மூவரும் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று காவல் தேதி முடிந்ததால், வீடியோ கான்பரன்சிங் முறையில் ராமநாதபுரம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிபதி ஜெயராஜ் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். அவர்களுக்கு டிச.,16 வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary:
Colombo: Sri Lankan fishermen arrested three people in Rameswaram Dec., 16, extended custody until a judge ordered Ramanathapuram.
English Summary:
Colombo: Sri Lankan fishermen arrested three people in Rameswaram Dec., 16, extended custody until a judge ordered Ramanathapuram.