
இந்த தீவிரவாதிகள் இந்தியாவில் புதிய தாக்குதல்களை அரங்கேற்றும் வகையில் ஐஎஸ்ஐ வழிநடத்துவதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஸ்வாட் பள்ளத்தாக்கு மற்றும் டோரா போரா மலைப்பகுதியில் தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே பின்னணியில் இருந்து தாக்குதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் கைவிடும்படி மத்திய உள்துறை ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹார்தோய் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் தீவிரவாதிகளை ஊக்கப்படுத்துவதும், ஆதரவளிப்பதும் தீவிரவாத நடவடிக்கையே என்று குற்றம் சாட்டினார். துணிச்சல் இருந்தால் நேருக்கு நேர் மோத வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார். கடந்த சனிக்கிழமை எல்லை தாண்டி ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த தாக்குதல் புல்வாமா மாவட்டம் பாம்போரில் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
English summary:
NEW DELHI: Pakistan's spy agency ISI plot to organize terrorist attacks across the country, the Central Intelligence Agency has warned. Operators of them militants from Pakistani intelligence officials intercepted telephone conversation between the hearing of the attack revealed the plot.