சென்னை: சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்துள்ளது. நாடா புயல் வலுவிழந்து நேற்று காலை காரைக்கால் அருகே கரையை கடந்தது. இதனால் தமிழகத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னையில் மயிலாப்பூர், வடபழனி, பட்டினப்பாக்கம், ராமாபுரம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் விடிய விடிய பரவலாக மழை பெய்தது.
இதனால் சாலைகளின் இருபுறங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மாற்று அதன் சுற்று வட்டாரங்களில் நேற்று இரவு மிதமான மழை பெய்தது. சுமார் அரைமணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கடுத்து ஓடியது.
இதேபோல் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான தாயில்பட்டி, பெறப்பட்டு, சித்தூராஜபுரம், நாரணாபுரம் உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் மூன்று மணி நேரம் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம், கள்ளிக்குடி, கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தது. இதனிடையே நடா புயல் கரையை கடந்தாலும் அடுத்து வரும் புயல் தமிழகத்தை மிரட்டுகிறது. தெற்கு அந்தமான் கடற்பரப்பில் உருவாகியுள்ள காற்றுழத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் என வானிலை மையம் கூறியுள்ளது.
English Summary:
Chennai, Tamil Nadu, including a variety of places rain dawn to dawn. The weakness of the storm crossed the coast near Karaikal tape yesterday morning. In many places, causing widespread downpour of Tamil Nadu.