ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் சுமத்ரா மாகாணத்தில், பன்டா ஏசேஹ் என்ற நகரில் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. இதில் 54 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரியுலியுட் என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவானது. அங்குள்ள மக்கள் வழிபாட்டிற்காக தயாராகி கொண்டிருந்த போது பூகம்பம் ஏற்பட்டது. கட்டடங்கள் சரிந்து விழுந்ததில், 7 குழந்தைகள் உட்பட 54 பேர் பலியானார்கள். மேலும் சிலர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஏராளமான மக்கள் காயமடைந்துள்ளனர்.
அந்நகரில் உள்ள மருத்துவமனைக்கு, காயமடைந்த நிலையில் பலர் வந்து கொண்டுள்ளனர். பலர் அருகில் உள்ள நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பூகம்பத்தால், அந்த இடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. பூகம்பத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
English Summary:
Sumatra province in Indonesia, Banda eceh severe earthquake occurred in the city. In which 54 people were killed, officials said panic