புதுடில்லி : பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வரும் காங்., தலைவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என பா.ஜ., எச்சரித்துள்ளது.
வழக்கு பாயும் :
டில்லியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்ததாவது: பிரதமர் நரேந்திர மோடி மீதும், பா.ஜ., தலைவர் அமித் ஷா மீதும், அடிப்படை ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை, காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதுபோன்ற அபாண்டமான பொய் புகார்களை கூறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பொய் புகார் கூறியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.
வெற்றி:
ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு பின் நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய காங்., கட்சி, அதிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
English Summary:
New Delhi : Prime Minister Narendra Modi, BJP national president Amit Shah, have been making groundless accusations against Cong., BJP leaders to continue on the case, warned.