சென்னை : ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வராக வேண்டும் என்றும் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற அம்மா பேரவையின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் :
சென்னை கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு வருவாய்த்துறை அமைச்சரும் பேரவை செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் தலைமை தாங்கினார், கூட்டத்தில் அதிமுக அவைத்தலைவர் இ.மதுசூதனன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வீட்டுவசதி வாரியத்தலைவரும், புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளருமான பி.கே.வைரமுத்து, மாவட்ட பேரவை செயலாளர்கள் ரவிக்குமார்( தென்சென்னை (வடக்கு)ஆர்.எஸ்.ராஜேஷ்( வடசென்னை வடக்கு ) முகமது இம்தியாஸ் ( வடசென்னை ( தெற்கு ) அஜாக்ஸ் பரமசிவம்( திருவள்ளூர் கிழக்கு ) மணிமாறன் ( திருவள்ளூர் மேற்கு ) உள்ளிட்ட பேரவையின் 50 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா மறைவால் துயரம் :
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:
தமிழக மக்களின் நலன் ஒன்றையே முழு மூச்சாகக் கொண்டு தமது வாழ்நாள் முழுவதும் அருந்தொண்டாற்றி, மக்கள் சேவையில் மகத்தான சாதனை படைத்திட்டவரும்உலகத் தமிழ் மக்களின் ஒரே நம்பிக்கையாகவும், இந்த உலகத்தில் ஈடு இணையற்ற தலைவராகவும், உலகம் வியக்கின்ற வகையில், அதிமுகவை வளர்த்து 6வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்று, இந்தியாவின் சிறப்புமிக்க முதலமைச்சராக புனித ஆட்சி நடத்தியவரும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் வழி நடத்தி, ஏழை எளிய சாமானிய கடைக்கோடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி காட்டி என்னாளும் வாழும் வரலாறாக ஆனவரும்,உலக மக்களால் “அம்மா” என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த முதலமைச்சர் ஜெயலலிதா , எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தியது குறித்து, அம்மா பேரவை அதிர்ச்சியும், ஆற்றொணாத் துயரமும் கொள்கிறது.
பாரத ரத்னா விருது :
முதல்வர் ஜெயலலிதா மறைவால் பிரிந்து வாழும் கோடானு கோடி, இரத்தத்தின் இரத்தமான அதிமுக உடன் பிறப்புகளுக்கும், தமிழக மக்களுக்கும், அம்மா பேரவை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.உலகத் தமிழர்களின் இதயத்தில் நிறைந்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா “திருவுருவப் படத்தை” தமிழக சட்டமன்றப் பேரவையில் வைப்பதற்கும்,உலகத்தை காத்து வழி நடத்திட இப்பூவுலகில் அவதரித்து, “தமிழ் இனம் காத்து நின்ற தமிழர் குலச் சாமி” முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது” அளிப்பதற்கு மைய அரசிற்கு வேண்டுகோள் வைத்தும், தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை தொடர் சட்டப் போராட்டம் நடத்தி, பெற்று கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு , நாடாளுமன்ற வளாகத்தில் “முழு திருவுருவ வெண்கல சிலை” அமைப்பதற்கு மைய அரசிடம் வேண்டுகோள் வைத்தும்,தமிழக மக்களின் நலனையே, தன்நலன் என வாழ்ந்து மறைந்திருக்கின்ற அம்மா நல்லடக்கம்
செய்யப்பட்ட அதே இடத்தில், உலகம் போற்றி வணங்குகின்ற வகையில் “நினைவு மண்டபம்” அமைப்பதற்கும், அம்மா பேரவை தீர்மானம் நிறைவேற்றுகிறது. ,
தாயை காத்த தெய்வம் :
முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு மிகப் பெரிய வெற்றிடம் உருவாகியிருக்கிறது. எத்தனை சோதனைகள் வந்தபோதும், முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்காக்கும் தாயாக, தோழியாக, உறுதுணையாக நின்று தாயை காத்திட்ட தெய்வமாக வாழ்ந்து வருபவர், கோடானு கோடி தொண்டர்களின் பாசத்திற்குரிய, நேசத்திற்குரிய, ஒரே நம்பிக்கை சசிகலா எண்ணில் அடங்காத துன்பங்களையும், வேதனைகளையும் ஜெயலலிதா சந்தித்த போதெல்லாம் அவருக்கு உற்ற துணையாக, பாதுகாவலாக, வழிதுணையாக, விழியாக இருந்து துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டவர் சசிகலா .முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட சொல்லொண்ணாத் துன்பங்களையெல்லாம், இன்முகத்தோடு தனதாக்கி கொண்டவர் சசிகலா என்பதைஇந்த நாடு நன்கறியும். முதல்வர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டு காலம் இணைந்து நின்று அவரது சீர்மிகு சிந்தனையை, மனித நேயத்தை, அறிவு ஆற்றலை, சிறப்புமிகு செயலாற்றலை, கருணை உள்ளத்தை, தொலைநோக்குப்பார்வையை தன்னகத்தே கொண்டிருப்பவர் சசிகலா .
தமிழக முதல்வராக வேண்டும்:
முதல்வர் ஜெயலலிதாவோடு இணைந்து நின்று ஒன்றரைக்கோடி அதிமுக தொண்டர்களும் அறிந்து வைத்திருக்கின்ற ஒரே தலைவி சசிகலா. முதல்வர் ஜெயலலிதா வழி நடத்தி வந்த ராணுவ கட்டுக் கோப்புடன் தொடர்ந்து வழி நடத்திட சசிகலாதான் ஒரே நம்பிக்கையாக நமக்கு கிடைத்திருக்கின்றார். இந்த கருத்திற்கு ஒரு மாற்று இந்த இயக்கத்தில் இல்லை. அப்படி யாரேனும் ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பாரானால் அவர் இந்த இயக்கத்தின் உண்மை தொண்டனாக இருக்க மாட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் விசுவாச பிள்ளையாக இருக்கமாட்டார். எம்.ஜி.ஆரின் இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்பாக இருக்க மாட்டார்.
கடந்த 33 ஆண்டுகாலமாக அம்மா அவர்களுக்காகவே, தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர்“தியாகத்தின் பிறப்பிடம்” சசிகலா.
அதனால்தான் முதல்வர் ஜெயலலிதாவே தன்னைப் பெற்றெடுத்த தாயின் இடத்தை சசிகலா தான் நிரப்பி உள்ளார், அவரை அம்மாவாகவே பார்க்கின்றேன் என்ற உண்மையை இந்த உலகத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பலமுறை எடுத்து வைத்திருக்கின்றார். ஜெயலலிதா மீது சசிகலா கொண்டுள்ள பற்றுக்கும், விசுவாசத்திற்கும், பாசத்திற்கும் இதைவிட வேறு சான்று தேவையில்லை. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் காக்கும் தாயாக, உறுதுணையாக நின்று தோழியாக வாழ்ந்து வருகின்ற கோடானு கோடி தொண்டர்களின் பாசத்திற்கும்,சசிகலா கழக தொண்டர்களின் ஒரே நம்பிக்கையாக இருக்கின்ற சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்க வேண்டும். ஆர்.கே.நகர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, மகத்தான வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராகி ஜெயலலிதா வழியில் தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கித்தர வேண்டும் என்று அதிமுகவின் அமைப்பு ரீதியான 50 மாவட்டங்களின் அம்மா பேரவை மாவட்டச் செயலாளர்களும் விசுவாசத்தோடு சசிகலாவை வலியுறுத்துகிறது.. இவ்வாறு அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சசிகலாவிடம் நேரில் வலியுறுத்தல் :
முன்னதாக அமைச்சர் உதயகுமார் தலைமையில் அம்மா பேரவையின் 50 மாவட்ட செயலாளர்களும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர், இதன் பின்னர் சென்னை போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவை நேரில் சந்தித்து அம்மா பேரவையின் தீர்மானத்தை அளித்தனர்.
English Summary:
Tamil Nadu Chief Minister Jayalalithaa won R.K nagar to be in the way of India's Tamil Nadu state chief minister RB should be changed District Secretaries meeting of the Council chaired by Uthayakumar's mother decided.