ராமமோகன ராவ் கூறும் தத்தத்துவத்திற்கு தமிழக முதல்வரும், அமைச்சர்களும்தான் பதில் சொல்ல வேண்டும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களிடம் அவரளித்த பேட்டியில் கூறியதாவது: தமிழகம்முழுவதும் மழையின்மை காரணமாக கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது. அனைத்து மாவட்ட விவசாயிகளும் வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி போராடிவருகிறார்கள். தஞ்சை டெல்டா பகுதியில் கூட மழையின்மையால் வறட்சிநிலவுகிறது. எனவே தமிழகத்தை வறட்சி மாநிலமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும். அறிவித்த பின்னர் அரசு எடுக்கவேண்டிய நடவடிக் கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோளாகும்.
வார்தா புயல் தமிழகத்தை தாக்கி 16 நாள்களாகிவிட்டது. இதில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் (காங்கிரஸ்) நாடாளுமன்றத்தில் பேசுகின்றபோது தமிழகத்திற்கு உடனடியாக மத்திய அரசு நிவாரணத்தொகையை அறிவிக்கவேண்டும். அந்தத்தொகையை தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்படவேண்டும். பிறகு மத்திய குழுவை தமிழ்நாட்டிற்கு அனுப்பவேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். இதற்கு திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளைச்சேர்ந்த எம்.பிக்களும் ஒருமித்த குரல் கொடுத்தனர். ஆனால் வார்தா புயல் தாக்கி 15 நாள்கள் கழித்துத்தான் மத்தியக்குழுவே தமிழ் நாட்டுக்கு வருகிறது. 15 நாள்களில் ஏன் மத்திய குழுவை அனுப்பவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை. குழுவே இப்போதுதான் வந்திருக்கிறது. இடைக்கால நிவாரணம் இதுவரை அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் சுமத்துகிறேன். எனவே 15 நாள்கள் கழித்து மத்திய குழுவை அனுப்பி இருப்பது தமிழ்நாட்டை வஞ்சிக்கும் காரணிதான் என்றும் நான் குற்றம்சாட்டுகிறேன்.
மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு இடைக்கால நிவாரணத்தொகையை அறிவிக்கவேண்டும். மத்திய குழுவின் அறிக்கையின் அடிப்படையில் நிவாரணத்தொகையை தமிழ்நாட்டு தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
பணம்மதிப்பு வாபஸ் காரணமாக நாட்டில் ஏறத்தாழ அனைத்தும் செயலிழந்திருக்கிறது என்பதை நான் தொடர்ந்து தெரிவித்துவருகிறேன். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை(டிச. 26) சென்றிருந்தேன். அப்போது அங்கு செயல்பட்டுவந்த தேசிய பஞ்சாலை நிறுவனம் (என்.டி.சி) கடந்த 30 நாள்களாக மூடிக் கிடைப்பதாக அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் என்னிடம் தெரிவித்தார்கள். உடனே பஞ்சாலை நிறுவன அதிகாரிகளிடம் தொடர்புகொண்டு விசாரித்தபோது 30 நாள்களுக்கு முன்பு நூல் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த நூல்கள் விற்க முடியாமல் ரூ. 15 கோடி அளவுக்கு தேங்கிவிட்டது. அதனால் வரவுசெலவும் நின்றுவிட்டது. பஞ்சு வாங்கமுடியவில்லை. தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை. இதில் நேரடியாக 500 குடும்பங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இங்கு மக்களவை உறுப்பினர்,சட்டபேரவை உறுப்பினர் என இருந்தும் வாய்திறக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது.
காளையார்கோயில் பஞ்சாலை விவகாரத்தை உடனே மத்திய ஜவுளித்துறை செயல ருக்கு இதுகுறித்து குறுந்தகவல் அனுப்பினேன். அவர் என்னிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து காய்கறி, பழங்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள் ளது. ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ. 2, தக்காளி, வெங்காயம் விலை குறைந்து விட்டது. நுகர்வோருக்கு நல்லதுதான் என்றாலும் விவசாயி செலவழித்த முதலை கூட எடுக்க முடியாமல் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்திய விவசாயிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம் பணம் மதிப்பு நீக்கம்தான் நேரடியான காரணம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
மத்திய ஆட்சியாளர்கள் ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் பணம் செல்லாது என்று அறிவித்தார்கள். அவர்கள் கட்டிய மனக்கோட்டை என்னவென்றால் இதில் 5 லட்சம் கோடி ரிசர்வ் வங்கிக்கு வராது என நினைத்திருந்தனர். இந்த 5 லட்சம் கோடியும் கறுப்பு பணம், அரசுக்கு லாபம் என அறிவித்துவிடலாம் என நினைத்திருந்தனர். மும்பையிலிருந்து நண்பர் ஒருவர் நம்பத்தகுந்த செய்தியை சொல்லியிருக்கிறார். செவ்வாய்க்கிழமை(டிச. 27) வரை 14 லட்சத்து 32 ஆயிரம் கோடி பணம் வங்கிகளுக்கு வந்துவிட்டது. இன்னும் எஞ்சியிருப்பது 1 லட்சம் கோடிதான். இன்னும் மூன்று நாளில் என் கணிப்புப்படி 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி பணமும் வங்கிக்கு வந்துவிடும். பிறகெதற்கு இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்?.
எனவே இந்திய மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். தமிழக மக்களுக்கு இயற்கை பேரிழப்பும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் மிகுந்த துயரத் திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.இவ்வளவு சூழ்நிலையில் இந்த ஆண்டு முடிகிறது. அடுத்த ஆண்டாவது நல்லபடியாக விடிய வேண்டும்.
தமிழக தலைமைச்செயலாளராக தொடர்ந்து நீடிப்பதாக ராமமோகன ராவ் கூறியிருக்கிறாரே உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுகுறித்து தமிழக முதல்வரும், அமைச்சர்களும்தான் பதில் சொல்ல வேண்டும். தலைமைச் செயலரை நீக்குவதற்கு தமிழக அரசுக்கு உரிமை கிடையாது என்று அவர் புதுதத்துவத்தை தெரிவிக்கிறார். அந்தத்தத்துவமெல்லாம் என்போன்ற சாதாரண ஆள்களுக்கு தெரியாது. இந்தத்தத்துவத்திற்கு தமிழக முதல்வரும், அமைச்சர்களும்தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
இப்பேட்டியின் போது தமிழக சட்டபேரவை காங்கிரஸ் தலைவர் கேஆர். ராமசாமி, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ப. சத்தியமூர்த்தி, முன்னாள் சட்டபேரவை உறுப்பினர்கள் என். சுந்தரம், ராம. சுப்புராம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
English Summary:
Tamil Nadu Chief Minister Rao words ramamokana say, that should answer ministers too p. Chidambaram said