சென்னை : வடகிழக்குப் பருவமழையால் சென்னையில் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வெள்ளம் வரும் என்று ஆள் ஆளுக்கு பீதியை கிளப்ப, மழையே பெய்யாமல் கடந்த ஆண்டு நிரம்பி வழிந்த செம்பரம்பாக்கத்தையே வற்ற வைத்தது. அய்யோ அப்போ குடிநீருக்கு மக்கள் குடத்தை எடுத்துக்கொண்டு அலையணுமோ என்று அச்சப்பட வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.
அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வலுவடைந்தது அது தென் மேற்கு திசை நோக்கி அதாவது தமிழகம் நோக்கி நகரத் தொடங்கியது. புதன்கிழமை அதிகாலை அது புயலாக மாறி மிகவும் வலுவான நிலையை அடைந்தது.
நாடா புயல் :
இது 45வது புயல் என்றும் அதற்கு நாடா என்று பெயர் வைத்திருப்பதாகவும் சொன்னார் வானிலை ஆய்வு யைம இயக்குநர் பாலச்சந்திரன். டிசம்பர் 2ல் புயல் கரையை கடக்கும் என்று கூறவே அவசரம் அவசரமாக பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தனர்.
நெருங்கிய புயல் :
இன்று காலை வழக்கம் போல வானம் தெளிவாகவே காணப்பட்டது. புயல்னு சொல்லி லீவு விட்டா இப்படித்தான், மழையக் காணோமே என்று 6 மணிக்கு காக்கா ஒன்று நக்கலாக கரைந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் சாரலாக தொடங்கி பெருமழையாக கொட்டித் தீர்த்தது.
நனைந்த சென்னை:
நவம்பர் மாத முதல் வாரத்தில் பெய்த மழைக்குப் பின்னர் சென்னைவாசிகளை ஏமாற்றியது வடகிழக்குப் பருவமழை. எப்போது பெய்யும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு இதோ வந்து விட்டேன் என்று கூறி விட்டு விட்டு நிதானமாக பெய்தது மழை.
குடையோடு இறங்கிய மக்கள்:
எதற்கும் உதவும் என்று கடந்த அக்டோபர் மாதமே தூசி தட்டி எண்ணெய் போட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்த குடையை எடுத்துக்கொண்டு வேலைக்கு கிளம்பினர் சென்னைவாசிகள். ரெயின் கோட் சகிதமாக சாலைகளில் பயணித்தனர் குடும்பஸ்தர்கள்.
ஜாலி டிரைவ் :
வெள்ளமும் இல்லாத... சாலைகளில் தண்ணீர் தேங்காத மழை என்பதால் இந்த மழை சென்னைவாசிகளுக்கு ஒரு சந்தோச அனுபவத்தையே ஏற்படுத்தியுள்ளது. 'நீரின்றி அமையாது உலகு' என்ற வள்ளுவர் வாக்குக்கு ஏற்ப இந்த மழையில் நனையத்தானே ஆசைப்பட்டோம் என்று ஜாலியாக பயணம் செய்தனர் சென்னைவாசிகள்.
அனுபவிக்கும் மக்கள்:
வெயிலோ மழையோ அந்தந்த சீசனுக்கு அது இருக்கணும். இதோ வந்துருச்சில்ல மழை என்று இனி தண்ணீர் பஞ்சம் வராது என்று வராது வந்த வடகிழக்குப் பருவமழையை அனுபவித்து வருகின்றனர் சென்னைவாசிகள்.
English summary :
This time Chennai is getting a good spell of rain and people are not much worried alike last year