சென்னை : வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புக்களை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நேற்று வந்தது. இந்த குழுவினர் முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
கடும் சேதம்:
கடந்த 12-ம் தேதி வர்தா புயல் சென்னை அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் போர்க்களமானது. சாலைகளில் இருந்த மரங்கள் விழுந்து ரோடுகள் காடுகள் போல் காட்சியளித்தது. மின்சார கம்பங்கள் சாலைகளில் சரிந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மூன்று மாவட்டங்கள் இருளில் மூழ்கின. தமிழக அரசு வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பணியாளர்களை வரவழைத்து போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டது. இதன்காரணமாக துண்டிக்கப்பட்ட மின்சாரம் விரைவாக கிடைத்தது.
மத்தியக்குழு வருகை:
சாலைகளில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டன. மின்சார கம்பங்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து தருவிக்கப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்கள் இயல்பு நிலைக்கு திரும்பின. இதற்கிடையே வர்தா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, இழப்பீடுகள் குறித்து மதிப்பிட மத்திய குழு நேற்று மாலை சென்னை வந்தது.
மத்தியக்குழு உறுப்பினர்கள்:
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் பர்வீன் வசிஷ்ட்டா தலைமையிலான இந்த குழுவில் மத்திய வேளாண் கூட்டுறவு விவசாயிகள் நலம் மற்றும் புகையிலை தடுப்பு பிரிவின் இயக்குனர் (பொறுப்பு) மனோகரன், நிதியமைச்சகத்தின் (செலவினப்பிரிவு) உதவி இயக்குனர் ஆர்.பி.கவுல், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறையின் துணை செயலாளர் நாராயண்ரெட்டி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தென்மண்டல இயக்குனர் ரோசினி அர்தூர், மத்திய மின்சார ஆணையத்தின் இணை இயக்குனர் சுமித்குமார், சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தின் மண்டல அதிகாரி டி.எஸ்.அரவிந்த், ஊரக வளர்ச்சித்துறை துணைசெயலாளர் எஸ்.பி. திரிவாரி, மத்திய நீர் ஆணைய இயக்குனர் (கண்காணிப்பு) ஆர்.அழகேசன் ஆகியோர் மத்திய குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
முதல்வருடன் இன்று சந்திப்பு:
இந்த குழுவினர் நேற்று மாலை இரவு தமிழகம் வந்தனர். இன்று காலை தலைமை செயலகத்திற்கு வந்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்கின்றனர். இதன்பின்னர் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட தி.நகர் பனகல் பார்க், அமைந்தகரை அண்ணா ஆர்ச் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து சிக்னல்கள் பாதிப்பு மற்றும் திருமங்கலத்தில் சரிந்து விழுந்த மரங்கள் மற்றும் அதன் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
நாளையும் ஆய்வு:
இதைத்தொடர்ந்து, மாலையில் மின்சார உள்கட்டமைப்பு வசதி சேதம் குறித்து மற்றும் காஞ்சிபுரம் வண்டலூர் பூங்கா ஆகிய இடங்களில் வர்தா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். இதைத்தொடர்ந்து நாளை ராயபுரம் மீனவர் பகுதி திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகின்றனர்.
English Summary:
Chennai: Central team to inspect damage caused by the storm varta came in yesterday. The group met today with Chief Minister suggested conducting opannircelvam