சென்னை : முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குறித்து விசாரிக்க தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
ஜெயலலிதா உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இன்று மாலையில் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று மாலை மாரடைப்பு ஏற்பட்டது.
அவர உடல் நிலையை இதயவியல், நுரையீலர் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் அப்போலோ வளாகம் பரபரப்படைந்தது. இந்த நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னைக்கு விரைந்து வந்தார்.
விமான நிலையத்திலிருந்து அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.
English Summary : The Governor is responsible for vidya sagar Rao came to Chennai .. rushed to Apollo.Tamil Nadu Chief Minister Jayalalithaa, inquire about the health of the body responsible for the Governor Vidya sagar Rao came to Chennai. Due to illness Jayalalitha Apollo Hospital on September 22. In the last few days before he was in the intensive care unit, was transferred to a special ward.