சூரத்: சூரத்தில் டீ மற்றும் சிற்றுண்டி விற்பனையாளராக இருந்து பைனான்சியராக மாறிய கிஷோர் பஜிவாலா என்பவருக்கு ரூ.650 கோடி சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை:
சூரத்தின் புறநகர் பகுதியில் உதானா என்ற இடத்தில் பல வருடங்களாக டீ விற்பனையாளராக இருப்பவர் கிஷோர் பஜிவாலா. தற்போது அவர் பைனான்சியராகவும் செயல்பட்டு வருகிறார். இவர் ரூபாய் நோட்டு வாபசிற்கு பிறகு தனது வங்கிக்கணக்கில், கோடிக்கணக்கான அளவுக்கு பணம் டிபாசிட் செய்துள்ளதாக கூறப்படுகிறது . இதனால் சந்தேகமடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், கிஷோர் வைத்திருக்கும் லாக்கர்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில், இவரும், அவரது குடும்பத்தினரும் 40க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்கு வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
லாக்கர்கள்:
இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: "கிஷோர் மற்றும் அவரது குடும்பத்தினர் சொத்து குறித்து கிடைத்த தகவல் அடிப்படையில் நடந்த சோதனையில் ரூ.650 கோடி அளவுக்கு சொத்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 50 கிலோ வெள்ளி, ரூ.1.39 கோடி மதிப்புள்ள வைரம், பல கிலோ தங்கம், ரூ.6.5 கோடி மதிப்புள்ள பணம் லாக்கர்களில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது. இந்த சோதனையில் இன்னும் பல கோடி பணம் கண்டுபிடிக்கப்படலாம்" எனக்கூறினார்.
English Summary:
Surat: Surat tea and toast from the seller-turned-financier Rs 650 crore by Kishore pajivala is found. Income tax officials conducted a raid.